தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையான நயன்தாராவின், “காத்துவாக்குல ரெண்டு காதல்” திரைப்படம் திரையரங்குகள் சிறப்பாக வெற்றி நடைபோட்டு வருகிறது. இந்தச் சூழலில் நடிகை நயன்தாரா நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள 02 திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இந்தத் திரைப்படம் ஹாட்ஸ்டார் OTT தளத்தில் வெளியாக உள்ளது. இந்தத் திரைப்படத்தை அறிமுக இயக்குநர் ஜி.எஸ்.விக்னேஷ் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். 






இந்நிலையில் இந்தப் படத்தின் டீசரை இன்று படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த டீசரை ஹாட்ஸ்டார் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இந்த வீடியோவை பலரும் பார்த்து பகிர்ந்து வருகின்றனர். இது ஏற்கெனவே நயன்தாரா நடிப்பில் வெளியான அறம் திரைப்படத்தில் சில விஷயங்களுடன் ஒத்துப்போவதாக டீசர் ரிவ்யூ போடத்தொடங்கிவிட்டார்கள் நெட்டிசன்கள்.


இந்தத் திரைப்படம் தமிழ், தெலுங்கு,கன்னடா, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது. இந்தத் திரைப்படத்திற்கான படப்பிடிப்பு கடந்த ஆண்டு முடிவடைந்தது. அதன்பின்னர் தற்போது அந்தப் படத்தை வெளியிடுவதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் படம் எப்போது ஹாட் ஸ்டார் தளத்தில் வெளியாகும் என்பது தொடர்பான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண