நடிகை நோரா ஃபதேஹியின் நடன அசைவுகளுக்கு ரசிகர்கள் அதிகம்; அவர் பதிவிடும் படங்களும், வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் அவ்வபோது வைரலாகும். சமீபத்தில் துபாய் சென்ற நோரா ஃபதேஹி அங்குள்ள நீச்சல் குளத்தில் நேரம் செலவிட்டுள்ளார். கறுப்பு நிற நீச்சல் உடை அணிந்த அவரின் படங்களும் வீடியோக்களும் இணையத்தில் கலக்கி வருகின்றன.



சமீபத்தில் நோரா ஃபதேஹி தனது மியூசிக் வீடியோவான `டான்ஸ் மெரி ராணி’யில் ஹாலிவுட் பாப் பாடகி ஷகிராவுடன் நடனமாடினார். அவருடைய படங்களை அடிக்கடி இன்ஸ்டாகிராம் தளத்தில் பதிவிடும் நோரா ஃபதேஹி, இன்று கறுப்பு நிற பிகினி அணிந்த படங்களைப் பதிவிட்டுள்ளார்.


கடந்த டிசம்பர் 21 அன்று, நோரா ஃபதேஹியின் `டான்ஸ் மெரி ராணி’ பாடல் வெளியிடப்பட்டது. இதுவும் உடனடியாக ஹிட்டாக மாறியது. இதுவரை யூட்யூப் தளத்தில் சுமார் 131 மில்லியன் வியூஸ்களுக்கும் அதிகமாக பெற்றுள்ளது இந்தப் பாடல்.