Nora Fatehi : ஜாக்குலின் பெர்னாண்டஸ் மீது அவதூறு வழக்கு பதிவு... அதிரடி ஆக்ஷனில் இறங்கிய நோரா ஃபதேஹி 

பண மோசடி வழக்கில் நடிகை நோரா ஃபதேஹி,  ஜாக்குலின் பெர்னாண்டஸ் மீது அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார்

Continues below advertisement

சமீபத்தில் தொழிலதிபரின் மனைவியை ஏமாற்றி பண மோசடி செய்த குற்றங்களின் கீழ் பாலிவுட் நடிகைகள் ஜாக்குலின் பெர்னாண்டஸ், நோரா ஃபதேஹி ஆகிய இருவருக்கும் சமன் அனுப்பப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அந்த வகையில் நடிகை நோரா ஃபதேஹி,  ஜாக்குலின் பெர்னாண்டஸ் மீது அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார் எனும் செய்தி தற்போது வெளியாகியுள்ளது.

Continues below advertisement

 

 

விலை உயர்ந்த பரிசு பொருட்கள் :

ரூ.200 கோடி பணம் மோசடி செய்த சுகேஷ் சந்திரசேகர் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அந்த விசாரணையின் படி ரூ.10 கோடிக்கும் மேல் விலை உயர்ந்த பரிசு பொருட்கள் ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு வழங்கப்பட்டுள்ளது என தெரிய வந்தது. மேலும் பாலிவுட் நடிகையான நூரா ஃபதேஹியும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்களை பரிசாக பெற்றுள்ளார் என தெரிய வந்தது. 

நோரா ஃபதேஹி மனு தாக்கல் :

அந்த வகையில் நோரா ஃபதேஹி, ஜாக்குலின் பெர்னாண்டஸ் மீது அவமதிப்பு வழக்கு தொடர்ந்ததன் காரணத்தை விளக்குகையில் " சக நடிகையான ஜாக்குலின் பெர்னாண்டஸ் என்னுடைய பெயருக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் திட்டமிட்டு சதி செய்து என்னை இதில் சிக்கவைத்துள்ளார். மாடலிங் துறையிலும் சினிமா துறையிலும் எனது முன்னேற்றத்தை பார்த்து பொறாமைப்பட்டு அது பிடிக்காமல் இது போன்ற பொய் வழக்குகளை என் மீது திணிக்க நினைக்கிறார்கள். என்னோடு நேரடியாக நியாயமான முறையில் போட்டியிட முடியாமல் இது போல வேலைகளில் இறங்கியுள்ளனர்" என தனது மனு மூலம் தெரிவித்து இருந்தார் நோரா ஃபதேஹி. 

Continues below advertisement
Sponsored Links by Taboola