சர்வதேச அளவில் பாராட்டுகளை குவித்து வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் சாதனை படைத்த திரைப்படம் ஆர்ஆர்ஆர். எஸ்.எஸ். ராஜமௌலியின் இயக்கத்தில் நடிகர்கள் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து கடந்த மார்ச் மாதம் வெளியான இப்படம் உலகளவில் 1,100 கோடிக்கு மேல் வசூல் செய்தது. சமீபத்தில்  ஜாப்பனீஸ் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு ஜப்பானில் வெளியிடப்பட்ட இப்படம் அங்கும் நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 


இந்தத் திரைப்படம் ஆங்கிலம் அல்லாத பிற மொழி பிரிவில் கோல் குலோப் 2023 விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.



கோல்டன் குளோப் விருதுகள் (Golden Globe Awards) சிறந்த உள்ளூர் மற்றும் வெளியூர் திரைப்படம், மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்காக ஆண்டு தோறும் வழங்கப்பட்டுவரும் ஒரு விருது ஆகும். இது ஹாலிவுட் வெளிநாட்டு செய்தி நிறுவனத்தினால் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுக்கு ஆர்ஆர்ஆர் படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளதால் அந்தப் படக் குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


முன்னதாக, மகத்தான சாதனை படைத்த ஆர்ஆர்ஆர் திரைப்படத்திற்கு நியூயார்க் பிலிம் கிரிட்டிக்ஸ் சர்க்கிள் விழாவில் சிறந்த இயக்குனருக்கான விருதை வென்ற எஸ்.எஸ்.ராஜமௌலி. இந்த விருதுக்காக நாமினேட்  செய்யப்பட்ட மற்ற இயக்குனர்களான ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், டாரன் அரோனோஃப்ஸ்கி,  சாரா பாலி மற்றும் ஜினா பிரின்ஸ்-பிளைத்வுட் ஆகியோர் மத்தியில் ராஜமௌலியின் வெற்றி பலரை ஆச்சரியப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.  இந்த விருது மூலம் இந்தியாவை பெருமைப்படுத்தியுள்ளது ஆர்ஆர்ஆர் திரைப்படம். 


Actress Poonam Bajwa: திருமண ப்ரோபோசல் அனுப்பிய 7ம் வகுப்பு மாணவன்.. பேட்டியில் உண்மையை உடைத்த பூனம் பாஜ்வா!


மறுபக்கம் ஏமாற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாத ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் எழுத்தாளர் மற்றும் ராஜமௌலியின் தந்தையான விஜயேந்திர பிரசாத் அவரின் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். 2022ம் ஆண்டு முழுவதும் ஆர்ஆர்ஆர் திரைப்படத்தை கொண்டாடி இப்படம் ஆஸ்கார் விருதை நிச்சயமாக வெல்லும் என பல உரையாடல்களில் ஊக்குவிக்க மிகுந்த நம்பிக்கையுடன் இருந்த எனக்கு லாஸ்ட் ஃபிலிம் ஷோ (செல்லோ ஷோ) ஆஸ்கார் விருதுக்கு இந்தியாவின் அதிகாரபூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டது மிகுந்த ஏமாற்றத்தை கொடுத்தது என மிகுந்த மனவேதனையுடன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார் ஆர்ஆர்ஆர் படத்தின் எழுத்தாளர் விஜயேந்திர பிரசாத்.