மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக வரும் வானதியாக நடிக்க முதலில் தனக்கு அழைப்பு வந்ததாக நடிகை நிவேதா பெத்துராஜ் தெரிவித்துள்ளார். 


மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் படம் இரண்டு பாகங்களாக வெளிவந்துள்ளது. அதில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த பொன்னியின் செல்வன் 2 பிளாக்பஸ்டர் வெற்றிப்பெற்றது. முதல் பாகத்தில் கடலில் மூழ்கிய பொன்னியின் செல்வனான அருள்மொழி வர்மனை மீட்பதில் தொடங்கி, இரண்டாம் பாகம், ஒவ்வொரு காட்சியிலும் ரசிக்க வைத்தது.


கரிகாலனின் இளமைக் கால காதலில் தொடங்கி இறுதியாக கரிகாலன் மற்றும் நந்தியினின் முடிவு என படம் முழுவதும் ரசிகர்களை ஈர்த்தது. படத்தில் நடித்திருந்த ஒவ்வொரு நடிகர்களும் அவர்களுக்கான நடிப்பை சரியாக வழங்கி பாராட்டைப் பெற்றனர். 


இதில், மிகவும் முக்கியமான கேரக்டரான அருண்மொழிவர்மனாக ஜெயம் ரவி நடித்து அசத்தி இருப்பார். அவருக்கு ஜோடியாக வானதி கேரக்டரில் ஷோபிதா துலிபாலா நடித்திருப்பார். படத்தில் இடம்பெற்றிருந்த ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஷோபிதா, ஐஸ்வர்யா லட்சுமி போட்டிப்போட்டு தங்களின் பிரமாண்ட நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்கள். இந்த நிலையில் பொன்னியின் செல்வனில் ஷோபிதா நடித்திருந்த வானதி கேரக்டரில் நடிக்க தன்னிடம் ஆடிஷன் நடித்தப்பட்டதாக நடிகை நிவேதா பெத்துராஜ் தெரிவித்துள்ளார். 


இது தொடர்பாக பேசிய அவர், “பொன்னியின் செல்வன் படத்திற்காக ஆடிஷனுக்கு தன்னை அழைத்தனர். மணி சார் என்னை சந்திக்க விரும்புவதாக தான் அழைத்தார்கள். மணிரத்னம் சார் அழைத்து இரண்டாவது முறையாக ஆடிஷனுக்கு சென்றிருந்தேன். முதல் முறை செக்க சிவந்த வானம் படத்திற்காக சென்றிருந்தேன். பொன்னியின் செல்வன் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக என்னை நடிக்க வைக்க அழைத்து இருந்தனர்.


ஆடிஷனில் மணிரத்னம் சார் இருந்தார். ஒன்றரை பக்கம் டயலாக் கொடுத்து என்னை பேசிக் காட்ட சொன்னார்கள். அதில் “மன்னிச்சிருங்க” என்ற ஒரு வார்த்தை இருந்தது. தூய தமிழில் டயலாக் இருந்தது.  டயலாக் பேசும் போது மன்னிச்சிருங்க என்ற வார்த்தையை “ஐ அம் சாரி” என இங்கிலீஷில் கூறிவிட்டேன். அதைக் கேட்ட மணி சார் பயங்கரமாக சிரித்து விட்டார். அதற்கு முன்புவரை மணி சார் அப்படி சிரித்து நான் பார்த்ததே இல்லை” எனக் கூறியுள்ளார்.


2016ஆம் ஆண்டு வெளிவந்த ஒருநாள் கூத்து படத்தின் மூலம் பிரபலமான நிவேதா பெத்துராஜ், டிக் டிக் டிக், திமிரு புடிச்சவன், பொதுவாக எம்மனசு தங்கம், சங்கத்தமிழன், பொன் மாணிக்கவேல் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 


மேலும் படிக்க: Amy Jackson: இந்திய ஆண்கள் ட்ரோல் பண்றாங்க.. கேலி பண்றதை உரிமைன்னு நினைக்கறாங்க.. எமி ஜாக்சன் விளாசல்..


Entertainment Headlines: விடாமுயற்சி அப்டேட்.. கேப்டன் மில்லருடன் போட்டி போடும் படங்கள்.. இன்றைய சினிமா செய்திகள்!