Amy Jackson: தனது புதிய தோற்றம் குறித்து சமூக வலைதளங்களில் விமர்சித்தவர்களுக்கு ஹாலிவுட் நடிகை எமி ஜாக்சன் பதிலடி கொடுத்துள்ளார். 


தமிழ் சினிமாவில் மதராசப்பட்டினம், ஐ, தெறி, படங்களின் மூலம் பிரபலமான எமி ஜாக்சன் இங்கிலாந்தைச் சேர்ந்தவர். இவர் ஆர்யாவுடன் நடித்த முதல் படமே பெரிய அளவில் பேசப்பட்டது. அழகில் தமிழ் ரசிகர்களின் மனதையும் கொள்ளையடித்தார். தொடர்ந்து 2.0, கெத்து, தங்கமகன் படங்களில் நடித்துள்ளார். அண்மையில் ஹாலிவுட் படங்களில் பிசியாக நடித்து வரும் எமி ஜாக்சனின் புகைப்படம் வைரலானது. 


வித்தியாசமான ஹேர் ஸ்டைலிலும், முகத்தோற்றத்திலும் இருந்த எமி ஜாக்சனை பார்த்த நெட்டிசன்ஸ், அவரின் தோற்றம் ஓப்பன்ஹெய்மர் படத்தின் நடிகர் கிலியன் மர்ஃபி போன்று இருப்பதாகக் கூறி ட்ரோல் செய்து வந்தனர். இந்த நிலையில் தனது புதிய தோற்றத்தின் மீதான விமர்சனத்துக்கு நடிகை எமி ஜாக்சன் பதிலடி கொடுத்துள்ளார். 






இது தொடர்பாக சமீபத்தில் பேட்டியளித்துள்ள அவர், “எனது தோற்றத்தை ஓப்பன்ஹெய்மர் படத்தின் நடிகர் கிலியன் மர்ஃபியுடன் ஒப்பிடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரு நடிகையாக என்னுடைய பணியை தீவிரமாக செய்து வருகிறேன். கடந்த மாதம் எனது புதிய படப்பிடிப்பு லண்டனில் தொடங்கியது.


அந்தப் படத்துக்காக எனது உடல் எடையைக் குறைத்து அதற்காக என்னை தயார்படுத்திக் கொள்கிறேன். ஆனால், எனது புதிய தோற்றம் குறித்த சிலரது விமர்சனங்கள் வருத்தம் அளிக்கிறது. என்னுடன் பணியாற்றும் ஆண் நடிகர்கள் தங்களின் கேரக்டருக்காக தோற்றங்களை எப்படியெல்லாமோ மாற்றிக் கொள்கிறார். அதற்காக அவர்கள் பாராட்டுக்களையும் பெற்றனர்.


இதுவே ஒரு பெண் அவரின் அழகை மீறி தனது முடியையும் தோற்றத்தையும் மாற்றிக் கொண்டால் கடுமையாக விமர்சிக்கப்படுகிறார். அதுவும் இந்தியாவில் இது போன்ற விமர்சனம் வருவது வருத்தமளிக்கிறது. இப்படி விமர்சிக்க அவர்களுக்கு எல்லா உரிமையும் உண்டு என நினைக்கிறார்கள்” எனக் கூறியுள்ளார். எமி ஜாக்சனின் இந்த பதிலுக்கு பலரும் சரியான பதிலடி எனக் கூறி கருத்து பதிவிட்டு வருகின்றனர். 


மேலும் படிக்க: Atlee Boxoffice Collection: ‘ராஜா ராணி’ முதல் ‘ஜவான்’ வரை.. அட்லீ படங்களின் முழு பாக்ஸ்ஆஃபிஸ் கலெக்‌ஷன் இதுதான்!


VidaaMuyarchi: வந்தாச்சு விடாமுயற்சி அப்டேட்: ஷூட்டிங்கில் பிசி ஆகப்போகும் அஜித்... பக்காவா பிளான் போட்ட மகிழ் திருமேனி!