2013ம் ஆண்டு மோகன்லால் நடிப்பில் வெளியான கீதாஞ்சலி என்ற படத்தின் மூலம் திரையுலகில் முன்னணி நாயகியாக அறிமுகமானார்


பிரபல நடிகையும் தயாரிப்பாளருமான திருமதி. மேனகா சுரேஷ் அவர்களின் மகள் தான் கீர்த்தி சுரேஷ். கீர்த்தி சுரேஷின் தந்தையும் ஒரு தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. லண்டன் மற்றும் ஸ்காட்லாந்து ஆகிய நாடுகளில் பேஷன் டிசைனிங் முடித்த கீர்த்தி சுரேஷ் குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் தோன்றினார். 2013ம் ஆண்டு மோகன்லால் நடிப்பில் வெளியான கீதாஞ்சலி என்ற படத்தின் மூலம் திரையுலகில் முன்னணி நாயகியாக அறிமுகமானார் கீர்த்தி. 


தமிழில் ஏ.எல். விஜய் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இது என்ன மாயம் திரைப்படம் மூலம் அறிமுகமானார். அன்று தொடங்கி பல நல்ல படங்களில் சிறந்த கதாபாத்திரங்கள் ஏற்று நடித்து வருகின்றார். 2018ம் ஆண்டு இவர் நடிப்பில் பல மொழிகளில் வெளியான நடிகையர் திலகம் படத்திற்காக இவருக்கு தேசிய விருது உள்பட ஆறு விருதுகள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.    


<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Tejj!!! Thank youu so much !! <a >@IamSaiDharamTej</a> 🤗❤️ <a >https://t.co/oLyNXaVqaj</a></p>&mdash; Keerthy Suresh (@KeerthyOfficial) <a >March 25, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>


இந்நிலையால் இந்த 2021ம் ஆண்டு சுமார் 6 திரைப்படங்கள் இவர் நடிப்பில் உருவாகி வருகின்றன. அதில் கீர்த்தி சுரேஷ் பிரபல தெலுங்கு நடிகர் நிதினுடன் இணைந்து நடித்துள்ள "ரங்தே" என்ற திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. தெலுங்கு திரையுலகில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பல படங்களில் ரங்தே படமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.