நடிகர் சுஷாந்த் சிங் உயிரிழந்து ஒரு வருடம்  கடந்தும், அவரது தற்கொலைக்கான காரணம் குறித்த உண்மை இன்னும் தெரியவரவில்லை. அதற்கு மாறாக அவரது முன்னாள் காதலியும்,  நடிகையுமான ரியா சக்கரபோர்தியும் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது, நடிகைகள் போதைப் பொருள் பயன்படுத்தும் விவகாரம் வெளிச்சத்திற்கு வந்து பூகம்பத்தை கிளப்பியது.  

 

நடிகைகள் ஷ்ரத்தா கபூர்,  சாரா அலி கான், ரகுல் ப்ரீத் சிங்,  தீபிகா படுகோன் மற்றும் உள்ளிட்ட பலரது பெயர்கள் அடிபட்டு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. பாலிவுட்டை தொடர்ந்து கன்னட சினிமா நடிகைகளும் போதைப் பொருள் விவகாரத்தில் சிக்கினர்.

 

இதனால் இது குறித்து சிபிஐ மற்றும் போதை தடுப்புப்பிரிவு காவலர்கள் இது குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொள்ள ஆரம்பித்தனர். அப்போது கன்னடாவில் சுமார் 14-க்கும் மேற்பட்ட நடிகைகளின் பெயர் பட்டியல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் படி, நடிகைகள் ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோர் முதலாவதாக கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உள்ளானார்கள். இதற்காக அவர்கள் இரண்டு பேரும் நான்கு மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர்.  


ராகினி திவேதி


 


அப்போது அவர்கள் இருவரிடமும் நடத்தப்பட்ட பரிசோதனையின் போது ரத்த மாதிரிகள் மற்றும்   சிறுநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டது. அதில் அவர்கள் இரண்டு பேரின் உடலிலும் போதை பொருள்கள் கலக்கவில்லை என உறுதியானது. இதனால் அவர்களுக்கு ஜாமின் வழங்கப்பட்டது. இந்நிலையில்  போதைப் பொருள்கள் ஒருவர் பயன்படுத்தினார்களா இல்லையா என்பதைக் கண்டுபிடிக்க, FSL போதைப் பொருள் சோதனை மேற்கொள்ளப்படும். அதைப் பயன்படுத்தினால், குறிப்பிட்ட நபர் ஒரு வருடத்திற்குள் போதைப் பொருள் பயன்படுத்தினார்களா? இல்லையா என்பது தெரியவரும். 

 

அவர்களின் தலைமுடியை கொண்டு எடுக்கப்படும் இந்த சோதனை எடுக்கப்படும்.  இந்த சோதனை நடிகைகள் ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோரிடம் எடுக்கப்பட்டது. அதை ஹைதராபாத்திற்கு அனுப்பி பரிசோதனை முடிவுக்காக வைக்கப்பட்டிருந்தது. 

 


 

பரிசோதனை முடிவில் இந்த இரண்டு பேரும் போதைப் பொருள் பயன்படுத்தி இருந்தது தெரியவந்துள்ளது. இதனால் இவர்கள் இருவரும் விரைவில்  விரைவில் கைது செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த FSL போதைப் பொருள்கள் பரிசோதனை மேற்கொண்டால் மேலும் பட நடிகைகள் இந்த பட்டியலில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் ஒரு ஆண்டு காலமாக இந்த போதை பொருள் விவகாரம் பாலிவுட், சாண்டல்வுட் மத்தியில் பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது