நடிகர் ஆதிக்கும் நடிகை நிக்கி கல்ராணிக்கும் நாளை திருமணம் நடக்க இருப்பதாக கூறப்படும் நிலையில், தங்களுக்கிடையே காதல் மலர்ந்த கதையை அவர்கள் பகிர்ந்துள்ளனர். 


இது குறித்து ஆதி கூறும் போது, எங்களுக்குள்ள லவ் ப்ரோபஸ் பண்ணியெல்லாம் யாரும் லவ்வ சொல்லல..எங்களோடது ரொம்ப போரிங்கான லவ் ஸ்டோரி என்கிறார். நிக்கி சொல்லும் போது இது ரொம்ப ஹானஸ்ட்டா, ரியலிஸ்டிக்கா, நேச்சுரலா நடந்த ஒரு பிராசஸ் என்றார். அவருடன் தொடர்ந்த ஆதி, நாங்க ஒரு 6, 7 வருடங்கள் நண்பர்களாக இருந்தோம். அப்பத்தான் ஒருத்தர் ஒருத்தர நல்லா புரிஞ்சிக்கிட்டோம். அப்ப இரண்டு பேருக்குமே இவங்க நம்ம வாழ்கை துணையா வந்தா நல்லாயிருக்கும்னு தோணுச்சு. இரண்டு பேருமே நிறைய விஷயங்களை ஷேர் பண்ணோம். அப்படித்தான் எங்களோட காதல் மலர்ந்தது. பார்த்தவுடனேயெல்லாம் காதல் வரல.. இப்ப வரைக்கும் நாங்க ப்ரோபஸ் பண்ணிக்கிட்டதே இல்ல. அதுதான் உண்மை.” என்றார். 


 






 


நடிகர் ஆதியும், நிக்கி கல்ராணியும் நீண்ட நாட்களாக ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்தனர். இந்த நிலையில் இருவருக்கும் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் கடந்த மார்ச் மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது. இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்ட நிக்கி கல்ராணி, “வாழ்க்கையில் ஒருவரையொருவர் பிடித்துக் கொள்வதுதான் சிறந்தது. சில வருடங்களுக்கு முன்பு எங்களை நாங்களே கண்டுபிடித்தோம்” என்று பதிவிட்டு இருந்தார். 






நிக்கி கல்ராணியும், ஆதியும் முன்னதாக, மல்பு, யாகவராயினும் நா காக்க, மரகரத நாணயம் உள்ளிட்ட படங்களில் ஒன்றாக இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.