ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் வலிமை படத்தின் மேக்கிங் வீடியோ நேற்று வெளியிடப்பட்டது. அதில் வலிமை படத்தின் ஸ்டண்ட் காட்சிகள், கொரோனா காரணமாக வலிமை படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது தொடர்பான காட்சிகள், இதுமட்டுமன்றி அஜித் பைக் ஸ்டண்ட் செய்யும் போது கீழே விழுந்தது, பின்னர் மீண்டும் முயற்சித்து ஸ்டண்ட்டை மேற்கொண்டது தொடர்பான காட்சிகள் இடம்பெற்றிருந்தன.


முக்கியமாக ஸ்டண்ட் காட்சியை அவர் மீண்டும் செய்த போது அதில் மகாத்மா காந்தியின் வசனம்  இடம்பெற்றிருந்தது.இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், இந்த வீடியோ பற்றி பிரபலங்கள் சொன்ன கருத்துக்களை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.