இந்த வார தியேட்டர் ரிலீஸ் என்னவென்பது ஒருகாலத்தில் அனைவரின் எதிர்பார்ப்பு என்றால் இப்போதெல்லாம் அந்த வரிசையில் இணைந்துள்ளது ஓடிடி. இந்த வாரம் எந்த ஓடிடியின் என்ன படம் என பலரும் எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டார்கள். கொரோனாகாலத்தில் அசுர வளர்ச்சி அடைந்த ஒன்றுதான் ஓடிடி. சிறிய படங்கள் முதல் பெரிய படங்கள் வரை ஓடிடியில் வெளியாகின. தொடக்கத்தில் தியேட்டர் உரிமையாளர்களிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பினாலும் ஓடிடி வேறு, தியேட்டர்கள் வேறு என்பதை ரசிகர்களும், சினிமா தரப்பினரும் ஒப்புக்கொண்டனர். இன்றைய தேதிக்கு தியேட்டர் கல்லா கட்டுகிறது. 


ஓடிடி ரிலீஸும் பட்டையைக் கிளப்புக்கிறது. சில திரைப்படங்கள் நேரடியாக ஓடிடி ரிலீஸ் என்றால் சில திரைப்படங்கள் தியேட்டரில் ரிலீஸாகி பின்பு ஓடிடியில் வெளியாகின்றன. ரசிகர்களுக்கு எது விருப்பமோ அதன்படி படத்தை பார்த்து ரசிக்கலாம். அந்த வகையில் இந்த வாரத்தை ஓடிடி பக்கம் நீங்கள் ப்ளான் செய்தால் படங்களில் லிஸ்டை நாங்கள் தருகிறோம். ஜூன் 24ம் தேதியான நாளை முதல் இந்த வாரத்தில் ஓடிடியில் வெளியாகவுள்ள படங்களின் லிஸ்டை காணலாம்.






நெஞ்சுக்கு நீதி:



இந்தியில் தேசிய விருது பெற்ற ஆர்டிக்கள் 15 என்ற திரைப்படத்தின் தமிழ் ரீமேக் தான் நெஞ்சுக்கு நீதி. இரு பெண்கள் கொலை செய்யப்பட்டு தற்கொலையாக ஜோடிக்கப்பட்ட வழக்கைப் பற்றியது தான் இந்தக் கதை.இது சோனி லைவில் இன்று வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. அதன்படி அப்படம் வெளியாகியுள்ளது.


கதிர்


வேலையில்லாத நாயகனை மையமாக வைத்து உருவான கதிர் திரைப்படம் ஏற்கெனவே தியேட்டரில் வெளியானது. அப்போதெல்லாம் பார்க்கவில்லையே என வருத்தப்படும் சினிமா ரசிகர்கள் ஆஹா ஓடிடியில் இப்படத்தை பார்க்கலாம். இப்படம் நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


தெலுங்கு படங்கள்..


தெலுங்கு படங்களை பொருத்தவரை மகேஷ் பாபு, கீர்த்திசுரேஷ் நடித்துள்ள சர்க்காரு வாரி பட்டா திரைப்படம் அமேசானில் வெளியாகவுள்ளது. அதேபோல மற்றொரு தெலுங்கு படமான பெல்லி சந்தா ஜீ ஓடிடியில் வெளியாகவுள்ளது.






மலையாளம்..


நெட்பிளிக்ஸில் குட்டாவும் சிஷையும் திரைப்படமும், மேரி அவாசுனோ திரைப்படம் ஹாட் ஸ்டாரிலும் வெளியாகவுள்ளது.


ஹாலிவுட்..


இந்தியாவை தாண்டிச்சென்றால் நெட்பிளிக்ஸ் மற்றுன் ஹாட் ஸ்டாரின் ஹாலிவுட் படங்கள் களமிறங்குகின்றன். நெட்பிளிக்ஸில் மேன்vs பீ திரைப்படமும், ஹாட்ஸ்டாரில் டாக்டர் ஸ்ரேன்ச் 2 திரைப்படமும், லவ் அன் கெலோட்டோ திரைப்படம் நெட்பிளிக்ஸிலும் வெளியாகவுள்ளது.


ஓடிடி மட்டுமின்றி தியேட்டர்களிலும் படங்கள் வரிசைகட்டுகின்றன. விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள மாமனிதன், பட்டாம்பூச்சி, மாயோன் உள்ளிட்ட இன்னும் சில திரைப்படங்களும் திரையரங்கில் வெளியாகவுள்ளன.


Also Read | Maamanithan Review: தர்மதுரை பக்கத்துல வருமா.. எப்படி இருக்கு மாமனிதன்.? வொர்த்தா இல்லையா..? - விமர்சனம்..!