தான் எடை குறைந்தால் தொகுதி வளர்ச்சிக்கு நிதி தருவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நிதி தருவதாக மத்தியப்பிரதேச எம்பி அனில் ஃபிரோஜியா தெரிவித்துள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இந்தியாவில் கவுன்சிலர், எம்.எல்.ஏ., எம்.பி. ஏன் முதலமைச்சர் கூட சொந்த மாநிலத்திற்கு, சொந்த தொகுதியின் வளர்ச்சி பணிகளுக்கு அரசின் நிதியை எதிர்பார்த்து காத்திருக்கும் செய்திகளை நாம் கண்டிருப்போம். ஒரு வழியாக போராடி நிதி பெற்றாலும் அது போதுமானதாக இல்லை என்ற குற்றச்சாட்டும் அவ்வப்போது வெளிவருவது வழக்கம். ஆனால் இங்கு ஒரு எம்.பி. தனது தொகுதிக்கு நிதி வாங்க செய்த செயல் இணயத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது. 


மத்தியப்பிரதேச மாநிலம் உஜ்ஜயினி தொகுதி எம்பியாக இருப்பவர் அனில் ஃபிரோஜியா. இவர் கடந்த பிப்ரவரியில் உஜ்ஜயினியில் நடந்த ஒரு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் தனது தொகுதியின் வளர்ச்சிக்காக நிதி கேட்டுள்ளார். அப்போது 127கிலோ எடையுடன் இருந்த அவரிடம் மோடியின் ஃபிட் இந்தியா திட்டத்தில் இணைந்து இழக்கும் ஒவ்வொரு கிலோ எடைக்கும் ரூ.1000 கோடி நிதி வழங்கப்படும் என நிதின் கட்கரி தெரிவித்திருந்தார். 






இதனை ஒரு சவாலாக எடுத்துக் கொண்ட அனில் ஃபிரோஜியா கடந்த 4 மாதங்களில் சுமார் 15 கிலோ எடை குறைந்துள்ளார். இதன் மூலம் தான் ரூ.15 ஆயிரம் கோடி தொகுதிக்கான நிதி பெற தகுதியுடையவன் என அவர் தெரிவித்துள்ளார். இதற்கான கடுமையான உணவு முறையை பின்பற்றிய அனில், காலையில் 5.30 மணிக்கு எழுந்து நடைபயிற்சி,உடற்பயிற்சி, யோகா உள்ளிட்டவற்றை செய்கிறார். 


பின் ஆயுர்வேத உணவு முறைகளை பின்பற்றுவதாக கூறும் அனில் ஃபிரோஜியா  தொடர்ந்து தொகுதியின் வளர்ச்சிக்காக மேலும் எடை குறைக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அவரது உடற்பயிற்சி வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண