பாலிவுட் சினிமாவில் ரன்வீர் சிங், கார்திக் ஆர்யன், ரன்பீர் கப்பூர் ஆகியோர் ரசிகர்களை கவரும் ஐகான்களாக வளம் வர, தென்னிந்திய நடிகர்களும் அவர்களுக்கு டஃப் காம்பட்டிஷன் கொடுத்து வருகின்றனர்.


”புஷ்பா-னா ப்ளவர் நினைச்சிங்களா ஃபையரு டா” என  ஒருபக்கம் டாலிவுட் சினிமாவில் அல்லு அர்ஜூன் வசனம் பேசினால் இன்னொரு பக்கம் ”யாரோ பத்து பேர அடிச்சு டான் ஆனவன் இல்லை! அடிச்ச பத்து பேரும் டான் தான்”என சாண்டல்வுட் சினிமாவில் யாஷ் மாஸாக பஞ்ச் பேசி அசத்தினார்.


ஜூனியர் என் டி ஆர் மற்றும் ராம் சரண் ஆகிய இருவரும் சேர்ந்து ஆர்.ஆர்.ஆர் ஆன் ஸ்கீரினில் மிரட்டி கோடி கணக்கில் பாக்ஸ் ஆஃபிஸ் கலக்‌ஷனை குவிய செய்தனர். இதுபோல், கோலிவுட் சினிமாவில் புல் அரிக்கும் சீன்களுக்கு பஞ்சமில்லை.


சினிமாவில் எப்போதும் ஹீரோக்கள், பெண்களின் சாக்லெட் பாயாகவோ அல்லது உத்தம புருஷனாகதான் சித்தரிக்கபடுவார்கள்.
ஆனால் இப்போது ட்ரெண்டே மாறிவிட்டது..வர வர ஹீரோக்களும் பேட் பாய்ஸாக மாறி புது வகையான ஹீரோயிசத்தை திரையில் காட்டி வருகின்றனர்.




உதரணத்திற்கு, புஷ்பா படத்தில், செம்மரம் கடத்தி டானாக மாறும் அல்லு அர்ஜூன்; கேஜிஎஃப் படத்தில், தன் அம்மாவின் வார்த்தைக்கு கட்டுப் பட்டு வேர்ல்ட் லெவல் சுல்தானாக மாறும் ராக்கி ஆகிய கதாப்பாத்திரங்கள், தென்னிந்திய சினிமா வித்தியாசமான திரைக்கதையை நோக்கி நகர்வதை உணர்த்துகிறது.


எவ்வளவு நாள்தான் அரைத்த மாவையே அரைப்பது என்று நினைத்தார்களோ என்னவோ, இப்போது ஹீரோக்களுக்கும் வில்லன் சாயலை பூசி, ஹீரோவின் கெத்தை அடுத்த கட்டத்துக்கு  இயக்குநர்கள் கொண்டு செல்கின்றனர் . அதுமட்டுமில்லாமல் வில்லன்களுக்கு பயங்கரமாக பில்ட் அப் கொடுப்பதும், ஹீரோக்களின் எண்ட்ரிக்கு பிறகு வில்லனை டம்மி செய்வதும், பதிலுக்கு மீண்டும் வில்லன் ஹீரோவை டம்மி செய்வதுமாக கதைகளம் அமைந்துவருகிறது.


தமிழ் சினிமாவில், சமூகத்திற்கு போராடும் ஹீரோக்கள் மாறவில்லை ஆனால், சற்று மாடிஃபைட் நாயகன்களாக உருமாரி வருகின்றனர் என சொல்லலாம். தன் சமூகத்தினருக்காக அசுரனாகவும் கர்ணனாகவும் போராடும் தனுஷ், காளையாய் குத்துச்சண்டை போடும் சார்ப்பட்ட பரம்பரை ஆர்யா, தாழ்த்தப்பட்டோரின் நீதியை காக்க வாதாடும் ஜெய் பீம் சூர்யா ஆகிய கதாப்பாத்திரங்கள் தமிழ் சினிமாவின் புதிய வெர்ஷன் என கூறலாம்.




இப்படி ஒரு பக்கம் புதிய சினிமாவை வரவேற்றாலும், இது போன்ற கதாப்பாத்திரங்களை கமல் ஹாசன் போன்ற நடிகர்கள் முன்பே நடித்தனர் ஆனால் அந்த படங்கள் பேசு பொருளாக மாறவில்லை. ஒரு காலத்தில் கண்டுக்கொள்ளாமல் இருந்த படங்களை, மக்கள் இப்போது அண்டர்ரேட்டட் படங்களாக கருதுவதோடு , இந்த ஃபார்முலாவில் எடுக்கப்படும் படங்களை மக்கள் கொண்டாடித்தான் வருகின்றனர்.


இந்த மாற்றத்திற்கு காரணம் என்னவென்று சரியாக தெரியவில்லை ஆனால் ஆடியன்ஸ் எதிர்ப்பார்ப்புகளும், ரசனைகளும் மாறிவிட்டது என்பதை உணர்த்துகிறது.