பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தாவை ஒருவழியாக எழில் தேடி கண்டுப்பிடித்த காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது.
ரசிகர்களை கவர்ந்த பாக்கியலட்சுமி
விஜய் டிவி சீரியலில் ஒளிபரப்பாகும் சீரியல்களில், பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட்டாக உள்ளது.
இந்த சீரியலில் கோபியாக நடிகர் சதீஷ்குமார், பாக்கியலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, ராதிகாவாக நடிகை ரேஷ்மா ஆகியோர் நடிக்கின்றனர். இந்த சீரியலின் ஹீரோ கோபி, குடும்பத்திற்காக மனைவி பாக்யாவை பிடிக்காமல், அவரோடு சகித்து கொண்டு வாழ்ந்த நிலையில் அந்த சமயத்தில் தன்னை சந்திக்கும் முன்னாள் காதலி ராதிகா மீது, அவருக்கு மீண்டும் காதல் துளிர்கிறது.
இதற்காக கோபி செய்யும் ஒவ்வொரு தகிடு தத்தங்கள் என்னென்ன என்பதான திரைக்கதை சுவாரஸ்யமாக சென்ற நிலையில், கடந்த சில மாதங்களாக எபிசோட்கள் அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தி வருகிறது.குறிப்பாக பாக்யாவை விவாகரத்து செய்த நிலையில், ராதிகாவை திருமணம் செய்து கொண்டு தனது குடும்பத்தினருக்கு கோபி அதிர்ச்சியளித்தார்.
அதன் தொடர்ச்சியாக பாக்யா குடும்பம் இருக்கும் வீட்டிற்கு எதிர் வீட்டிலே இருவரும் மயூவுடன் குடியேறுகிறார்கள். இதன் பின்னர் வீட்டில் திட்டியதால் கோபியுடன் இனியா செல்கிறார். இதனைத் தொடர்ந்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என பார்க்கலாம்.
எழில் - அமிர்தா சந்திப்பு
அமிர்தாவை தேடி அவரது ஊருக்குப் போன எழில் ஒவ்வொரு இடமான அலைகிறார். அப்போது ஒருமுறை தனது நண்பர் ஒருவர் தனது காரில் அமிர்தா குடும்பத்தை ஊரில் கொண்டு வந்தது விட்டது நியாபகம் வர, அதைப்பற்றி அவரிடம் கேட்கிறார். ஆனால் தனக்கு சரியாக தெரியவில்லை என்று அவர் சொல்ல எழில் சோகமாகிறார். இறுதியாக தேடி தேடி அமிர்தாவை கண்டுபிடிக்கிறார்.
அவரைப் பார்த்ததும் எப்படி இங்க வந்தீங்க என கேட்க, நீ எங்க போனாலும் அங்க நான் வருவேன் என எழில் கூறுகிறார். பின்னர் ஓரிடத்தில் இருவரும் அமர்ந்து பேசுகின்றனர். அப்போது என்னை பிடிக்காமல் ஊருக்கு வந்துட்டீங்களா என எழில் கேட்கிறார்.
அதற்கு அமிர்தா, வர்ஷினி வீட்டுக்கு வந்த கதையையும், தனக்கும் எழிலுக்கு திருமணம் நடக்கவுள்ளதாக சொன்னதாகவும் தெரிவிக்கிறார். இதைக்கேட்டு அதிர்ச்சியடையும் எழில் கோபமடைகிறார். அவரை அமிர்தா சமாதானப்படுத்தும் நிலையில், பாக்யாவிடம் இருந்து போன் கால் வருகிறது.
அவரிடம் அமிர்தாவை பார்த்த விஷயத்தை மகிழ்ச்சியாக எழில் கூறுகிறார். பின்னர் அவரிடம் பாக்யா எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்றும், எழில் நீ இல்லாமல் ரொம்ப கஷ்டப்பட்டான் எனவும் சொல்லும் காட்சிகளோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.