நடிகை நயன்தாரா-இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமண நிகழ்வு ஒளிபரப்பாவது குறித்து நெட்பிளிக்ஸ் நிறுவனம் அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் நட்சத்திர காதல் ஜோடிகளில் ஒன்றாக அறிப்பட்ட நடிகை நயன்தாரா-இயக்குநர் விக்னேஷ் சிவன் கடந்த ஜூன் மாதம் 9 ஆம் தேதி மாமல்லபுரத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள முக்கிய பிரபலங்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் நடிகர்கள் ரஜினிகாந்த், ஷாருக்கான், விஜய் சேதுபதி, சரத்குமார், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். திருமணத்தில் கலந்து கொண்டவர்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. மேலும் திருமண புகைப்படங்களை அவ்வப்போது இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டு வந்தார்.
மேலும் திருமணத்திற்கு பிறகு தாய்லாந்துக்கு ஹனிமூன் சென்ற இந்த தம்பதியினர் அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிரிந்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர். இதனிடையே திருமண நிகழ்வை ஒளிபரப்ப நெட்பிளிக்ஸ் நிறுவனத்திடம் ரூ.25 கோடிக்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டதால் திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில் திருமண நிகழ்வை ஒளிபரப்பும் முடிவை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைவிட்டதாக தகவல் வெளியானது.
திருமணத்தில் எடுக்கப்பட்ட பல புகைப்படங்களை இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமணமான முதல் மாதத்தை கொண்டாடும் வகையில் வெளியிட்டதால் திருமண நிகழ்வு ஒளிபரப்பாவதின் எதிர்பார்ப்பு குறைந்து விடும் என நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் நினைத்தாக சொல்லப்பட்டது. ஆனால் அது வெறும் புரளி என்பதை நிரூபிக்கும் வகையில் நெட்பிளிக்ஸ் நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் பயணம் பற்றிய ஆவணப்படம் விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை நயன்தாரா - விக்னேஷ் சிவன் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்