நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் இந்த ஆண்டு வெளியாக இருக்கும் முன்னணி நடிகர்களின் படங்களின் பட்டியலைப் பார்க்கலாம்.


நெட்ஃப்ளிக்ஸ்


 கொரோனா நோய் தொற்றுக்குப் பின் ஓடிடி தளங்களின் நுகர்வு பலமடங்கு பெருகியுள்ளது. முன்னணி ஓடிடி தளங்களில் ஒன்று நெட்ஃப்ளிக்ஸ். உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு மொழிகளில் படங்கள், ஆவணப்படங்கள், வெப் சீரீஸ்களை தயாரித்து வெளியிட்டு வருகிறது. மேலும் திரையரங்குகளில் வெளியாகும் முன்னணி  நடிகர்களின் படங்களின் ஓடிடி உரிமத்தைப் பெற்றும் நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டு தங்கள் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கும் பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்கள் பற்றிய தகவலைப் பகிர்ந்துள்ளது நெட்ஃப்ளிக்ஸ். 


விடாமுயற்சி




மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் நடித்து வரும் படம் விடாமுயற்சி. த்ரிஷா, அர்ஜூன் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்து வருகிறார்கள். நிரவ் ஷா மற்றும் ஓம் பிரகாஷ் இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார்கள். அனிருத் இசையமைத்து வருகிறார். லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் இந்தப் படத்தை தயாரித்து வருகிறது. விடாமுயற்சி படத்தின் ஓடிடி உரிமத்தை நெட்ஃப்ளிக்ஸ் பெற்றுள்ளது.


தங்கலான்




பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் தங்கலான். மாளவிகா மோகனன், பார்வதி திருவோத்து உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ஸ்டுடியோ க்ரீன் இப்படத்தை தயாரித்துள்ளது. தங்கலான் வரும் ஏப்ரல் மாதம் திரைக்கு வர இருக்கிறது. திரையரங்கத்தைத் தொடர்ந்து இப்படம் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகும்.


எஸ்.கே 21




ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் எஸ்.கே 21. சாய் பல்லவி இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்க, ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடிக்கும் நிலையில், படத்தின் பெரும்பாலான காட்சிகள் காட்சிகள் காஷ்மீரில் படம்பிடிக்கப்பட்டுள்ளன. எஸ்.கே 21 படத்தின் ஓடிடி உரிமத்தை நெட்ஃப்ளிக்ஸ் பெற்றுள்ளது.


ரிவால்வர் ரீடா




கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் புதிய படம் ரிவால்வர் ரீடா. கே.சந்திரு இந்தப் படத்தை இயக்கியுள்ளார். ரிவால்வர் ரீடா படத்தின் ஓடிடி உரிமத்தை  நெட்ஃப்ளிக்ஸ் பெற்றுள்ளது. அடுத்தபடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள கன்னிவெடி படத்தின் ஓடிடி உரிமத்தையும் நெட்ஃப்ளிக்ஸ் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


சொர்க்கவாசல்




சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் ஆர்.ஜே பாலாஜி நடித்துள்ள படம் சொர்க்கவாசல். திரையரங்கத்தைத் தொடர்ந்து  தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் இப்படம் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  


மஹாராஜா




மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் 50 ஆவது படம் மஹாராஜா. குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சாமிநாதன் இப்படத்தை இயக்கியுள்ளார். இந்தி இயக்குநர் அனுராக் கஷ்யப் இந்தப் படத்தில் வில்லனாக நடித்துள்ளார். திரையரங்கத்தைத் தொடர்ந்து இப்படம் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாக இருக்கிறது.


மேலும் படிக்க: Ayalaan Review: ஏலியனுடன் “பொங்கல்” .. குழந்தைகளைக் குறிவைத்த சிவகார்த்திகேயன்.. அயலான் திரைப்பட விமர்சனம்!


Captain Miller Review: "தரமான ஆக்ஷன் விருந்து" தனுஷின் கேப்டன் மில்லர் பட விமர்சனம் இதோ!