மும்பையில் வசித்து வந்த பிரபல பாடகர் லதா மங்கேஷ்கர், உடல்நல பாதிப்பு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 92. பாடகி லதாவின் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகி வரும் ‘நெஞ்சுக்கு நீதி’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு ஒத்திவைக்கப்படுவதாக படக்குழு அறிவித்திருக்கிறது.
இந்தியில் ஹிட்டான ‘ஆர்டிக்கிள் 15’ திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்து ‘நெஞ்சுக்கு நீதி’ என்ற பெயரில் வெளியாக உள்ளது. இப்படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்க, உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடிப்பார் என்று அறிவிக்கப்பட்டது. இதனைத்தொடந்து, இதன் படப்பிடிப்பு பொள்ளாச்சியைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்றது.
இந்நிலையில், மறைந்த பாடகர் லதா மங்கேஷ்கருக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், இன்று வெளியாக இருந்த நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தின் டீசர் ஒத்திவைக்கப்படுவதாக படக்குழு அறிவித்திருக்கிறது. இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர், “லதா மங்கேஷ்கர் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இன்று வெளியாக இருந்த படத்தின் டீசர் ஒத்திவைக்கப்படுகிறது. நாட்டு மக்களோடு இந்த சோகத்தில் பங்கு கொள்கிறோம்” என தெரிவித்துள்ளார்.
இத்திரைப்படத்தின் படத்தொகுப்பை ரூபன் செய்கிறார். இப்படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஓகே ஓகே போன்ற காமெடி ஜானரில் நடித்து வந்த உதயநிதி ஸ்டாலின், மனிதன், நிமிர், பிசாசு போன்ற திரைப்படங்களில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இந்நிலையில், அனைவரது கவனத்தையும் ஈர்த்த ஆர்டிகிள் படத்தில் உதயநிதி நடித்திருப்பது அனைவரிடமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
லதா மங்கேஷ்கர் மறைவு:
மும்பையில் வசித்து வந்த அவருக்கு கடந்த மாதம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். பாடகி லதாவின் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்