இயக்குநர் அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள நெஞ்சுக்கு நீதி படத்தின் ட்ரெய்லர் வெளியாகி யூடியூப்பில் லைக்ஸ்களை குவித்து வருகிறது. 


இந்தியில் ஹிட்டான ‘ஆர்டிக்கிள் 15’ திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்து ‘நெஞ்சுக்கு நீதி’ என்ற பெயரில் தயாராகியுள்ளது. இந்தப்படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்க, உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடிப்பார் என்று அறிவிக்கப்பட்டது. இதனைத்தொடந்து, இதன் படப்பிடிப்பு பொள்ளாச்சியைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்றது.


 ‘நெஞ்சுக்கு நீதி’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. படம் உலகம் முழுவதும் மே 20-ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. சாட்டிலைட் உரிமையை கலைஞர் டிவி வாங்கியுள்ளது. ஓடிடி உரிமையை ஜி5 வாங்கியுள்ளது.


இந்த நிலையில், தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள நெஞ்சுக்கு நீதி படத்தின் ட்ரைய்லர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. ட்ரைய்லரின் தொடக்கத்தில் "எரிக்கதான் விடுவாங்க.. எரிய விடமாட்டாங்க" என்ற வசனங்களுடன் வெளியாகி, சமூக சீர்திருத்த வசனங்கள் ட்ரைய்லர் முழுவதும் வலம் வருகிறது. 



முன்னதாக, கடந்த பிப்ரவரி 11 படத்தின் டீசல் வெளியானது. அதில், போலீஸ் அதிகாரியாக நடிக்கும் உதயநிதி ஸ்டாலின் “நடுவுல நிக்கிறது இல்ல சார் நியூட்ரல்.. நியாயத்து பக்கம் நிக்குறதுதான் நியூட்ரல்” என பேசும் டையலாக் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. 


இத்திரைப்படத்தின் படத்தொகுப்பை ரூபன் செய்கிறார். இப்படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஓகே ஓகே போன்ற காமெடி ஜானரில் நடித்து வந்த உதயநிதி ஸ்டாலின், மனிதன், நிமிர், பிசாசு போன்ற திரைப்படங்களில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அனைவரது கவனத்தையும் ஈர்த்த ஆர்டிகிள் படத்தில் உதயநிதி நடித்திருப்பது அனைவரிடமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 


 ஹிந்தியில் வெளியான ‘ஆர்டிக்கிள் 15’ கதை என்ன..? 


வெளிநாட்டில் படித்து, டெல்லியில் பணிபுரிந்துவிட்டு, பின்னர் உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஒரு கிராமத்துக்குப் பணிபுரிய வருவார் காவல்துறைத் துணை ஆய்வாளர் அயன் ரஞ்சன். தாழ்த்தப்பட்ட சாதியினர் மீதான ஆதிக்கசாதியினரின் ஒடுக்குமுறை அயன்ரஞ்சனுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. தோல் தொழிற்சாலையில் பணிபுரியும் மூன்று தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த சிறுமிகள் 3 பேர் காணாமல்போகிறார்கள். அவர்களில் இரண்டு பேர் மரங்களில் தூக்குமாட்டித் தொங்கவிடப்பட்டனர். ‘இருவரும் ஒரு பாலின ஈர்ப்பாளர்கள். இது தெரியவந்ததால் தான் அவர்களது குடும்பத்தினரே சிறுமிகளை கொலை செய்தார்கள் என்று வழக்கை முடிக்க காவல்துறை முயற்சி செய்யும்.  மூன்றாவது சிறுமியைத் தேடவும் முயற்சி எடுக்காது. இந்த வழக்கை விசாரிக்க தொடங்கும்போதுதான் காவல்துறையின் உள்ளேயும் ஊடுருவியுள்ள சாதியக் கொடூர மனநிலை அயன் ரஞ்சனுக்கு தெரியவரும். கூடவே தாழ்த்தப்பட்ட மக்கள் மீது கிராமப்புரங்களில் நடத்தப்படும் வன்முறை, ஆதிக்கசாதி குணம், அதிகார மனநிலையும் இணைந்து அவர்களுக்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்று பல உண்மைகள் தெரியவருகின்றது. அந்த வழக்கை முடிக்க பல்வேறு தரப்புகள் முயற்சி செய்வதும், அந்த முயற்சிகளை முறியடித்து சமூக நீதிக்காக காவல்துறை துணை ஆய்வாளர் அயன் ரஞ்சம் நடத்து போராட்டமே ஆர்டிக்கிள் 15.





 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண