சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த சிவகார்த்திகேயனின் எந்த பட அப்டேட் என்றாலும் ஒரு எதிர்ப்பார்ப்பு இருக்கும். அனைத்து வயதினரையும் தனது ரசிகராய் கட்டிப்போட்டிருக்கும் சிவகார்த்திகேயனின் சமீபத்திய ஹிட் டாக்டர். இந்த திரைப்படத்திற்கு பிறகு அவர் அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் டான் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த டான் படமும் வருகிற மே 13 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியது. டான் திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் அயலான், சிங்கப்பாதை, நடிகர் கமல் தயாரிக்கும் புதிய படம் மற்றும் தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கும் பைலிங்குவல் படம் ஒன்றிலும் நடித்து வருகிறார்.
இந்தநிலையில், நடிகர் கமல் ஹாசனின் ராஜ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்ஸ் தயாரிக்கும் SK 21 திரைப்படம் குறித்து புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. நடிகை சாய் பல்லவியின் பிறந்தநாளான இன்று அவருக்கு பிறந்தநாள் பரிசு வழங்கும் விதமாக #SK 21 திரைப்படத்தில் நடிக்கிறார். இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவலை ராஜ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
அந்த ட்வீட் பதிவில், நடிகர் கமல் ஹாசனுடன், நடிகை சாய் பல்லவி, இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி மற்றும் தயாரிப்பாளர் மகேந்திரன் எடுத்துக்கொண்ட புகைப்படமும் இடம் பெற்றுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்