ஜானி மாஸ்டர்
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாத் துறையில் பிரபல நடன இயக்குநராக வலம் வருபவர் ஜானி மாஸ்டர் . சக பெண் கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதி பெங்களூர் போலீஸால் கோவாவில் வைத்து கைது செய்யப்பட்டார். உடன் பணிபுரிந்த பெண் துணை நடன இயக்குநரை பாலியல் வன்கொடுமை செய்த புகாரின் அடிப்படையில் காவல் துறை அவரை கைது செய்தது. தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தின் மேகம் கருக்காதா பாடலுக்காக ஜானி மாஸ்டருக்கு தேசி விருது அறிவிக்கப்பட்டது. இந்த விருதினைப் பெற்றுக் கொள்ள அவருக்கு நீதிமன்றம் கடந்த அக்டோபர் மாதம் ஜாமின் வழங்கியது கடும் எதிர்ப்புகளை சந்தித்தது.
தற்போது ஜானி மாஸ்டரை நடன இயக்குநர்கள் சங்கத்தில் இருந்து ஜானி மாஸ்டர் நீக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளத்தில் தகவல்கள் பரவின. இந்த தகவலை மறுத்து ஜானி மாஸ்டர் தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். " நடன இயக்குநர்கள் சங்கத்தில் இருந்து என்னை நிரந்தரமாக நீக்கியுள்ளதாக ஒரு தவறான தகவல் இணையத்தில் பரவி வருகிறது. என்னை யாரும் நீக்கவில்லை. திறமையுள்ளவர்களை பணியாற்றுவதை யாராலும் தடுக்க முடியாது. நான் பணியாற்றிய கேம் சேஞ்சர் படத்தில் இருந்து ஒரு பாடல் விரைவில் வெளியாக இருக்கிறது. " என ஜானி மாஸ்டர் இந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.