”ரஜினிகாந்திடம் கதை சொல்ல சற்று பயமாக இருந்தபோது, எனக்கு நம்பிக்கை அளித்தது நடிகர் விஜய்,” என இயக்குநர் நெல்சன் திலீப்குமார் ஜெயிலர் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.


ரஜினியிடன் கதையை எப்படி சொல்வது என்று தயக்கம் இருந்தபோது, நடிகர் விஜய் “அவரிடம் போய் கதை சொல்லு;எல்லாம் நல்லாதான் இருக்கும்” என்று தனக்கு நம்பிக்கை வார்த்தை சொன்னதாக நெல்சன் விஜய் குறித்து பேசியுள்ளார்.


ரஜினிக்கு நெல்சன் இயக்கிய ‘டாக்டர்’ திரைப்படம் பிடிக்குமாம். இந்தப் படத்தை இரண்டு முறை பார்த்து ரசித்திருகிறார். அண்ணாத்த படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் நெல்சனுடன் பணியாற்ற ஓகே சொல்லியிருக்கிறார்.


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்று வருகிறது. விழாவிற்கு படத்தில் நடித்த சிவராஜ் குமார், சுனில், ஜாக்கி ஷெராப் என பான் இந்தியா நட்சத்திரங்கள் வரிசை கட்டி வந்துள்ளனர்.