நீயா? நானா?
பிக் பாஸ், அது இது எது, ஸ்டார் மியூசிக் போன்ற ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர் போனது விஜய் தொலைக்காட்சி. அந்த வரிசையில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் “நீயா நானா” (Neeya Naana). சமூகத்தில் நிலவும் பிரச்சனைகளை, சாதாரண மனிதர்களை இரண்டு குழுக்களாக பிரித்து, இரு தரப்பினரின் கருத்துகளையும் கேட்டு, ஆராயும் நிகழ்ச்சியாக நீயா நானா பல ஆண்டுகளாக லைக்ஸ் அள்ளி வருகிறது.
வாரந்தோறும் ஞாயிற்றுகிழமை நண்பகல் 12 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த ஷோவை கோபிநாத் தொகுத்து வழங்கி வருகிறார். 2006ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் இதுவரை பலதரப்பட்ட தலைப்புகள் குறித்து பேசப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த வாரம் ‘நீயா நானா’ நிகழ்ச்சியில், 'அடிக்கடி நகை வாங்கும் குடும்ப தலைவிகள்' மற்றும் 'நகை வாங்குவதை கேள்வி கேட்கும் குடும்ப தலைவர்கள்' என்ற தலைப்பின் கீழ் இந்த வாரம் விவாதிக்கப்பட இருக்கிறது. இது சம்பந்தமான ப்ரோமோக்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அதில், பெண்கள் என்னென்ன டிசைன்களில் நகைகளை வாங்குகின்றனர் என்று கூற மறுபக்கம் அதனை ஏன் வாங்க வேண்டும்? என்ன அவசியம்? என்று ஆண்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். முதலில் வெளியான ப்ரோமோவில், ஒரு பெண் நீயா நானா ஷோக்காவே ஒரு நெக்லஸ் வாங்கியதாகவும், ரூபிக் நகை செட் என்று பலவிதமான நகைகளின் பெயரை கூறி அதனின் சிறப்பம்சங்களை கூறி வருகின்றனர்.
கலாய்த்த கோபிநாத்:
இதனை அடுத்து மற்றொரு ப்ரோமோவில், ஒரு மூக்கூத்தி வாங்கி கொடுங்கனு கேட்டா, மூக்கால அழுவனும் என்று ஒரு பெண் கூறியிருக்கிறார். அதற்கு எதிர்தரப்பில் இருக்கும் அவரது கணவர், ஆண்கள் எதுவும் ஆசைப்பட்டு போடக்கூடாதா? என்று கூறியதற்கு கோபிநாத் ’போ...செத்து போ’...என்று கலாய்த்து தள்ளினார். அதற்கு அந்த நபர் இது என்னோட லிஸ்ட்லையே இல்லையே என்று சிரித்தப்படி கூறியிருக்கிறார்.
இதனை அடுத்து, ”ஒட்டியாணம் வேண்டும் என்று தனது மனைவி கேட்டார். நானும் வாங்கிக் கொடுத்தேன். ஆனால் அதனை அவர் பயன்படுத்துவதில்லை. இதற்கு ஏன் வாங்குனும்?” என ஒரு நபர் கேள்வியை முன்வைத்தார். இதற்கு எதிர்தரப்பில் இருக்கும் அவரது மனைவி, ”என்னிடம் பத்து செட் நகை இருப்பதாலும், அதில் ஒட்டியாணம் மட்டும் இல்லையாமாம். அதனால் அதை ஆசைக்காக வாங்கினேன்” என்று கூறினார்.
கடுப்பான கோபிநாத்:
பின்னர், ”என்னுடைய நகைகளை அடமானம் வைத்து தான் நிலத்தை வாங்குகிறார்கள். நாங்கள் இதை சேமித்து வைத்ததால் தானே இதுபோன்ற வாங்க முடிந்தது” என்று ஒரு பெண் கூறினார். மற்றொரு பெண், "என்னுடைய கணவர் புதிய தொழில் மற்றும் வாகனங்கள் வாங்கும்போது என்னிடம் இருந்த நகைகளை வைத்து தான் பணம் கொடுத்தேன். மற்றவர்களிடன் ஒரு ரூபாய் கடன் கூட வாங்கவில்லை” என்று கூறினார்.
அப்போது, அவரது கணவர், "நகை அடமானம் வைத்தற்கான வட்டியை நாங்கள் தான் மாதம் மாதம் கட்டுகிறோம்" என்று கூறியுள்ளார். இதற்கு கடுப்பான கோபிநாத், "ஒரு பெண் குக்கருடன் வீட்டுக்கு வரும், சமைச்சி சாப்பிடலாம் என்று நினைத்தீர்களா? எனக்கு புரியல...ஒரு சின்ன புரிதல் இல்லனா எப்படி முன்னேற முடியும்” என்று கோபமாக கோபிநாத் கூறினார். இந்த காட்சிகள் ப்ரோமோவாக இணையத்தில் வெளியாகியது. இதனை பார்த்த பெண்கள், இதுதான் சரியான கேள்வி என்று கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.