நானி மற்றும் நஸ்ரியாவின் சூப்பர் காம்போவில் விரைவில் திரைக்கு வர இருக்கும் திரைப்படம் ‘அடடே சுந்தரா’. இந்த படத்தை புஷ்பா படத்தை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ்தான் தயாரித்துள்ளது. படத்தை விவேக் ஆத்ரேயா இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தின் மூலம் நஸ்ரியா தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகிறார். 


ரீல்ஸ் பண்ணலாம் வாங்க !


படத்தின் ஒரிஜினல் பதிப்பானது "அண்டே சுந்தரனிகி"  என்னும் பெயரில் தெலுங்கில் வெளியாகிறது. தமிழில் அடடே சுந்தரா என்னும் பெயரிலும் , மலையாளப் பதிப்பிற்கு "ஆஹா சுந்தரா" என்றும் பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. படம் நாளை (ஜூன் 10 ) வெளியாகவுள்ள நிலையில் படத்தின் புரமோஷன் வேலைகள் கடந்த சில நாட்களாக முழு மூச்சில் நடைப்பெற்று வருகிறது. இந்த சூழலில் படத்தின் பாடல் ஒன்றிற்கு  நானி மற்றும் நஸ்ரியாவுடன் இணைந்து , நானியின் மனைவியும் நடனமாடி ரீல்ஸ் புரமோஷனை முன்னெடுத்துள்ளனர். இதனை தனது வலைத்தள பக்கத்தில் பகிர்ந்த நஸ்ரியா “  இவர்கள் இருவருடனும் ரீலிங்..ஃபீலிங் ...இப்போ நீங்களும் ரீல்ஸ் பண்ணலாம்  “ என கூறி சில மிக்ஸ்ட் எமோஜிகளை பறக்கவிட்டிருக்கிறார். அந்த வீடியோவை கீழே காணலாம்.






 


செம கெமிஸ்ட்ரி :



 "அண்டே சுந்தரனிகி"  திரைப்படடம் முழுக்க முழுக்க காதல் , காமெடி எண்டர்டெய்னராக உருவாகியுள்ளது.  பிரமாண கூட்டு குடும்பம் ஒன்றில் ஒரே மகனாக பிறந்த நானிக்கும் , கிருத்துவ பெண்ணான லீலா தாமஸ் என்னும் நஸ்ரியாவிற்கும் இடையே மலரும் காதலும் அதற்கு பின்னால் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைதான் படத்தின் ஒன்லைன் என கூறப்படுகிறது. படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியிலேயே நானி மற்றும் நஸ்ரியாவிற்கு இடையில் நல்ல கெமிஸ்ட்ரியை காண முடிகிறது. இது படத்திலும் பிரதிபலுக்கும் என நம்பலாம். படம் வெளியாவதற்கு முன்னதாகவே ட்ரைலர் கிளிப்புகள் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.