இன்று பிறந்தநாள் கொண்டாடும் அன்டே சுந்தரலிங்கி படத்தின் இயக்குனர் விவேக் ஆத்ரேயாவிற்கு வாழ்த்து தெரிவித்து நடிகை நஸ்ரியா இன்ஸ்டா பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நீண்ட நாட்களுக்கு பிறகு கம்பேக் கொடுத்த நஸ்ரியா:
தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் முன்னனி நடிகையாக இருந்த நஸ்ரியா நஸிம் நீண்ட நாட்களுக்கு பிறகு நடித்த படம் அன்டே சுந்தலிங்கி. தமிழில் நேரம், நையாண்டி, ராஜா ராணி உள்ளிட்ட படங்களில் நடித்து “க்யூட் ஹீரோயின்” என ரசிர்கள் மத்தியில் பெயர் வாங்கிய அவர், கடந்த 2014ஆம் ஆண்டு பகத் ஃபாசிலை திருமணம் செய்து கொண்டார். கல்யாணத்திற்கு பிறகு படங்கள் எதிலும் கமிட் ஆகாத அவர், அன்டே சுந்தரலிங்கி படம் மூலம் கம்-பேக் கொடுத்தார். இப்படம் ஓடிடி தளமான நெட்பளிக்ஸில் ஜூன் மாதம் 10ஆம் தேதி வெளியானது. சமீபத்தில் இளைஞர்களின் கவனத்தை ஈர்த்த படங்களுள் அன்டே சுந்தரலிங்கியும் ஒன்று.
அன்டே சுந்தரலிங்கி-இயக்குனர் விவேக் ஆத்ரேயா:
ரெமான்டிக் காமெடி-ஃபீல் குட் படம் என்பதாலும், நஸ்ரியா நீண்ட நாட்களுக்கு பிறகு நடித்த படம் என்பதாலும், இப்படம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து போனது. தெலுங்கு மொழியில் எடுக்கப்பட்ட இப்படத்தில் நஸ்ரியாவிற்கு ஜோடியாக பிரபல நடிகர் நானி நடித்திருந்தார். இந்த படத்தின் இயக்குனர் விவேக் ஆத்ரேயா தனது பிறந்தநாளை இன்று கொண்டாடினார். இவர், எடுத்துள்ள படங்களான மென்டல் மதிலோ, கோவிந்தா கோவிந்தா, ஆகிய படங்கள் நல்ல விமர்சனங்களைப் பெற்று ரசிகர்கள் மத்தியில் இடம் பெற்றது. நடிகை நஸ்ரியா, இவருக்காக ஸ்பெஷல் இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நஸ்ரியாவின் பதிவு:
இயக்குனர் விவேக் ஆத்ரேயாவுடன் எடுத்துக் கொண்ட சில புகைப்படங்களை பதிவிட்டிருந்தார் நடிகை நஸ்ரியா.
அதில் அவர், “என்னுடைய ஃபேவரட் இயக்குனருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்” என குறிப்பிட்டுள்ளார். மேலும், “நீங்கள் எனக்கு பிடித்த இயக்குனர், எழுத்தாளர் மட்டுமன்றி ரொம்ப நல்ல மனிதர். நீங்கள் என் வாழ்வில் இருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. அன்டே சுந்தரலிங்கி படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கொடுத்ததற்கு மிக்க நன்றி, சி யூ சூன் காட்ஃபாதர்” எனவும் அந்த பதிவில் எழுதியுள்ளார்.இந்த போட்டோக்கள் வைரலாகி வருகின்றது.