ராஜமெளலி - மகேஷ்பாபு இணையும் படத்தில் கதாநாயகியாக நடிகை தீபிகாபடுகோன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 

Continues below advertisement


ஆர்.ஆர்.ஆர் படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து இயக்குநர் ராஜமெளலி தெலுங்கு பிரின்ஸ் என ரசிகர்களால் அழைக்கப்படும் மகேஷ் பாபுவுடன் இணைய இருப்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியாகமால் இருந்தது. இந்த நிலையில் கனடாவில் நடந்த டொராண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழாவிற்கு சென்ற இயக்குநர் ராஜமெளலி இப்படம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். 


 






அவர் பேசும் போது, “நான் அடுத்ததாக நடிகர் மகேஷ் பாபுவுடன் இணைய இருக்கிறேன். அந்தப்படம் ஆக்ஷன் மற்றும் சாகசம் நிறைந்த படமாக இருக்கும். இன்னும் சொல்ல வேண்டுமென்றால் இந்தப்படம் ஜேம்ஸ் பாண்ட், இந்தியானா ஜோன்ஸ் படங்கள் போல இந்திய கலாச்சாரத்தை உள்ளடக்கியதாக இருக்கும்” என்றார்


இந்தப்படம் குறித்து ராஜமெளலியின் தந்தை விஜேந்திரபிரசாத் பிங்க் வில்லா செய்தி நிறுவனத்திடம் பேசும் போது,  “ உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட இருக்கும் இந்தப்படம் ஆப்பிரிக்க காடுகளில் நடக்கும் சாகசங்களை மையப்படுத்தி எடுக்கப்பட இருக்கிறது. ஆக்சன், த்ரில்லர், ட்ராமா என அனைத்தும் இந்தப்படத்தில் இருக்கும். இந்தப்படத்தில் நடிக்கும் பிற நடிகர்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.” என்று பேசியிருந்தார்.இந்த நிலையில் இந்தப்படத்தில் நடிகர் மகேஷ்பாபுவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.


 


 






இந்தப்படம் குறித்து பேசியிருந்த நடிகர் மகேஷ்பாபு, “ எனது கனவு நனவாகி இருக்கிறது. நானும் ராஜமெளலியும் மிக நீண்ட நாட்களாக பணியாற்ற வேண்டும் என்று நினைத்து இருந்தோம். அது இறுதியாக நடந்து இருக்கிறது. அந்தப்படத்தில் படத்தில் பணியாற்ற நான் ஆவலாக இருக்கிறேன்.” என்று பேசினார். 


இந்தப்படம் இந்த வருட இறுதியில் வெளியாகுமென அறிவிக்கப்பட்ட நிலையில், மகேஷ்பாபு திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் உருவாகிவரும்  SSMB28 படத்தில் பிசியாக இருப்பதால் ராஜமெளலியின் படம் படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடத்திற்கு தள்ளிப்போகியுள்ளது.