குழந்தையுடன் நயன்தாரா இருக்கும் புகைப்படத்தை விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார்.
நடிகை நயன்தாரா சென்ற ஆண்டு இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்டதுடன் தொடர்ந்து சில மாதங்களில் வாடகைத் தாய் முறையில் இரட்டைக் குழந்தைகளுக்குத் தாயானார்.
சண்டே ஸ்பெஷல் ஃபோட்டோ
நடிகை நயன்தாரா சமூக வலைதளங்களில் கணக்கு வைத்திராத நிலையில், அவ்வப்போது தங்கள் குழந்தைகளின் முகம் தெரியாதபடி க்யூட்டான புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தொடர்ந்து இணையத்தில் பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில், தற்போது தங்கள் இரட்டைக் குழந்தைகளில் ஒரு குழந்தையை நயன் தூக்கிக் கொஞ்சும் புகைப்படத்தை விக்னேஷ் சிவன் பதிவிட்டுள்ளார். “என் உயிர்கள்... என் அன்பானவர்களுடன் ஞாயிறு சிறப்பாக போனது. எளிமையான தருணங்கள்” என விக்னேஷ் சிவன் உணர்வுப்பூர்வமாகப் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், விக்னேஷ் சிவனின் இந்தப் பதிவில், நடிகை ஸ்ருதி ஹாசன் உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் இதயங்களை வழங்கி கமெண்ட் செய்து வருகின்றனர்.
நயன் - விக்கி திருமணம்
நயன் தாரா- விக்னேஷ் சிவன் தம்பதி கடந்த மாதம் தங்கள் முதலாம் ஆண்டு திருமண நாள் ஆனிவர்சரியைக் கொண்டாடினர். மகாபலிபுரத்தின் கடந்த ஆண்டு ஜூன் 9ஆம் தேதி இவர்களது திருமணம் நெருங்கிய நண்பர்கள், திரையுலக நட்சத்திரங்கள், குடும்பத்தினர் சூழ நடைபெற்றது.
தொடர்ந்து தங்களது ஹனிமூன் புகைப்படங்களால் இணையத்தைக் கலக்கிய விக்னேஷ் சிவன் - நயன் தம்பதி சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் தங்கள் இரட்டைக்குழந்தைக்கு பெற்றோராகினர். இவர்கள் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தாங்கள் 2016ஆம் ஆண்டே பதிவுத் திருமணம் செய்து கொண்டதாக அறிவித்தனர்.
இரட்டைக் குழந்தைகளின் பெயர்கள்
இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் தங்கள் குழந்தைகளின் பெயர் உயிர் ருத்ரோநீல் மற்றும் உலக் தெய்வக் என அறிவித்தனர். தொடர்ந்து தங்கள் குழந்தைகளின் புகைப்படங்களையும், நயன் குழந்தைகளுடன் செலவிடும் அழகான தருணங்களையும் விக்னேஷ் சிவன் தன் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் நயந்தாராவின் இந்தப் புகைப்படம் தற்போது இணையத்தில் லைக்ஸ் அள்ளி வருகிறது.
மேலும் படிக்க: Tamannaah - Vijay Varma: தமன்னாவால் காதலருக்கு இப்படி ஒரு சோதனையா... வீட்டில் அழுத்தம்... திருமணம் பற்றி மனம் திறந்த விஜய் வர்மா!