கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வரும் கோலிவுட்டின் க்யூட் ஜோடி நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஆகியோர் தங்கள் திருமணத்திற்காக தயாராகி வருகிறார்கள். சமீபத்தில் இருவரின் திருமணப் பத்திரிக்கையை டிஜிட்டல் வடிவில் கிடைத்திருப்பதை Pinkvilla ஆங்கில இணையதளம் வெளியிட்டுள்ளது. அழகாக வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்தப் பத்திரிக்கையில் திருமணம் குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

"Wn, Save The Date FOR THE wedding of Nayan & Wikkk. 9th June 2022. Mahabs." என்று இந்தப் பத்திரிக்கையில் எழுதப்பட்டுள்ளது. மேலும், இதில் நயன்தாராவின் பெயரில் இருந்து விக்னேஷ் சிவனின் பெயர் வருமாறு எழுதப்பட்டுள்ளது. ரசிகர்கள் பலரும் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணத்திற்காக உற்சாகத்துடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.





வரும் ஜூன் 9 அன்று, காதல் ஜோடியான நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஆகியோர் தங்கள் வாழ்வின் அடுத்த கட்டமாக திருமண உறவில் இணைகின்றனர். குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்துகொள்ளவுள்ள இந்த நிகழ்ச்சியை முதலில் பெரியளவில் வெளிநாட்டில் நடத்துவதற்குத் திட்டமிட்ட இருவரும் தங்கள் திட்டத்தை மாற்றியுள்ளனர். குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்துகொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்தாலும், விஜய் சேதுபதி, சமந்தா முதலான நெருங்கிய நண்பர்களும் இந்தத் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.




திருமண நிகழ்ச்சியில் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்துகொண்டாலும், திரைத்துறையைச் சேர்ந்த நண்பர்களுக்கு இருவரும் திருமண பார்ட்டி ஒன்றை நடத்துவார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.

கடந்த 2021ஆம் ஆண்டு, மார்ச் 25 அன்று, விக்னேஷ் சிவன் வெளியிட்ட படம் ஒன்றில், நயன்தாராவின் கையில் மோதிரத்தோடு, விக்னேஷ் சிவன் நெஞ்சில் இடம்பெற்றிருப்பதாக காட்டியிருந்தார். மேலும், நயன்தாரா ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அந்த மோதிரம் தனது நிச்சயதார்த்த மோதிரம் என்பதைக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2015ஆம் ஆண்டு, `நானும் ரவுடிதான்’ திரைப்படத்தின் மூலமாக விக்னேஷ் சிவன் - நயன்தாரா தங்களுக்குள் அறிமுகமாகினர். தொடர்ந்து கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வரும் இந்த ஜோடி, `ரவுடி பிக்சர்ஸ்’ என்ற பெயரில் திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருவதோடு, பல்வேறு திரைப்படங்களையும் தயாரித்துள்ளனர். நயன்தாரா பல துறைகளிலும் தொழிலபதிராக கால் பதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது


ஆழியில் அலசி எடுத்த இணைக்கு வாழ்த்துக்கள்..