நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம் சிறப்பாக நடந்து முடிந்த நிலையில், தற்போது விருந்து நடந்து வருகிறது. விருந்தில் சுத்தமான சைவ உணவுகள் மட்டுமே பரிமாறப்படுகிறது. இதோ அந்த உணவு வகைகள்.
- பன்னிர் பட்டானிக்கறி
- பருப்புக் கறி
- அவியல்
- மோர் குழம்பு
- மிக்கன் செட்டிநாடு கறி
- உருளை கார மசாலா
- வாளைக்காய் வருவல்
- சென்னா கிழங்கு வருவல்
- சேப்பக்கிழங்கு புளிக்குழம்பு
- காளான் மிளகு வறுவல்
- கேரட் பொரியல்
- பீன்ஸ் பொரியல்
- காய் பொரிச்சது
- பொன்னி ரைஸ்
- பலாப் பழம் பிரியாணி
- சாம்பார் சாதம்
- தயிர் சாதம்
- பூண்டு மிளகு ரசம்
- தயிர்
- வெஜிடபுள் ரைதா
- வடகம்
- வத்தல்
- அப்பளம்
- ஏலக்காய் பால்
- பாதாம் அல்வா
- இளநீர் பாயாசம்
- கேரட் ஐஸ் கிரீம்
நயன்தாரா திருமண நிகழ்வில் விவிஐபிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்ட நிலையில், குறிப்பிட்ட சிலருடன் இந்த நிகழ்வு நடந்து கொண்டிருக்கிறது. உள்ளே யாருக்கும் தொலைபேசி கொண்டு செல்ல அனுமதி இல்லை. இதனால் உள்ளே நடைபெறும் நிகழ்வுகளை காணமுடியாத நிலை உள்ளது. நயன்தாரா என்ன உடை அணிந்திருக்கிறார்; மணக்கோலத்தில் எவ்வாறு உள்ளார் என்கிற எதிர்பார்ப்பில் அவரது ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் தீவிர அசைவ விரும்பிகள் என்றாலும், இந்து முறைப்படி நடைபெறும் இந்த திருமணத்தில், சுத்த சைவ உணவுகளை தான் இருவரும் ஏற்பாடு செய்துள்ளனர்.
செட்டிநாடு உணவுகளை மெனுவாக வைத்து, அசைவ உணவுக்கு இணையான மெனுவை நயன்-சிவன் ஜோடி ஏற்பாடு செய்துள்ளது. அதுமட்டுமின்றி, தமிழ்நாடு முழுவதும் உள்ள 20 ஆயிரம் சிறுவர்களுக்கு மதிய உணவு ஏற்பாடுகளை நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஜோடி செய்துள்ளது.
நடிகை நயன்தாரா-இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமண நேரலை வீடியோ கீழே!
நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமண அப்டேட்டுகளை அடுத்தடுத்து அறிய...
Nayanthara Vignesh Shivan Marriage LIVE: என்கிற பக்கத்தை க்ளிக் செய்து அறிந்து கொள்ளலாம்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்