விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதி ஸ்பெயினில் இருந்தபடி சுதந்திர தினம் கொண்டாடி புகைப்படங்கள் பகிர்ந்து நெட்டிசன்களைக் கவர்ந்து வருகின்றனர்.
நாடு முழுவதும் சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் திரையுலகப் பிரபலங்களும் தங்கள் தேசப்பற்றை வெளிப்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவுகளைப் பகிர்ந்து கொண்டாட்டத்தில் பங்கேற்று வருகின்றனர்.
இந்நிலையில், ஸ்பெயினில் இருந்தபடி சுதந்திரதினத்தைக் கொண்டாடியும், இந்தியக் கொடியை ஸ்பெயினில் உயர்த்தி ஏந்தியபடியும் விக்கி - நயன் ஜோடி புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளனர்.
முன்னதாக தங்கள் ஹனிமூன் ட்ரிப்புக்கு அடுத்தபடியாக வெளிநாடு சென்று வெக்கேஷனை செலவிட உள்ளதாகக் கூறி பார்சிலோனா சென்ற நயன் - விக்கி ஜோடி விமானத்தில் பறந்தபடி தங்கள் புகைப்படங்களைப் பகிர்ந்து ட்ரெண்ட் செய்தனர்.
இந்நிலையில் அங்கிருந்து தற்போது ஸ்பெயின் வந்துள்ள இந்த ஜோடி, அங்கு சுதந்திர தினத்தைக் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.
விக்னேஷ் சிவன் தன் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ள் இந்த புகைப்படங்கள் லைக்ஸ் அள்ளி வருகின்றன.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்