விக்னேஷ் சிவன் - நயன்தாரா
கோலிவுட்டின் ரசிகர்களால் அதிகம் நேசிக்கப்படும் ஜோடிகளில் ஒன்று விக்னேஷ் சிவன் நயன்தாரா . இருவரும் ஒரு பக்கம் நடிப்பு இயக்கம் என பிஸியாக இருந்தாலும் குடும்ப வாழ்க்கைக்கும் சம அளவிலான நேரத்தை ஒதுக்கி வருகிறார்கள். உயிர் உலகு என இரு மகன்களுடன் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வது இன்ஸ்டாகிராமில் வீடியோ , ஃபோட்டோஸ் வெளியிடுவது என பயங்கர அக்டிவாக இருந்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது விஜயதசமி பண்டிகையை குடும்பமாக கொண்டாடி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்கள்..
மகன்களுடன் விஜயதசமி கொண்டாடிய விக்கி - நயன்
தனது இரு மகன்களுடன் விஜயதசமி சிறப்பு வழிபாடு செய்து தங்கள் ஊழியர்களுக்கு மகன்கள் கையால் பரிசுகளை வழங்கினார்கள். பரிசுகளை வழங்கும் போது இருகைகளால் அதை கொடுக்கச் சொல்லி நன்றி சொல்ல சொல்லி தனது மகன்களுக்கு நயன்தாரா சொல்லிக் குடுப்பதைப் பார்க்க நம் மனம் கவர்கிறது.