Nayanthara with Twins: நடிகை நயன்தாரா தனது இரட்டை குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 


ஐயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் அறிமுகமான நயன்தாரா ரஜினி, விஜய், அஜித், விக்ரம், தனுஷ், சிம்பு என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். ரசிகர்களால் தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என அன்போடு அழைக்கப்படும் நயன்தாரா 2015 ஆம் ஆண்டில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நானும் ரவுடி தான் படத்தில் நடித்தார். இந்த படம் விக்னேஷ்சிவனுக்கு திரையுலகில் மட்டுமல்ல, சொந்த வாழ்விலும் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. 


இருவரும் 8 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 9 ஆம் தேதி மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ரிசாட்டில் கோலாகலமாக திருமணம் செய்துக் கொண்டனர். இவர்கள் திருமண நிகழ்வில் தமிழ் சினிமாவின் முக்கிய பிரபலங்கள், குடும்பத்தினர், உறவினர்கள் என குறைவான நபர்களே கலந்து கொண்டனர். திருமணம், ஹனிமூன் சென்ற புகைப்படங்கள் அனைத்தையும் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு ரசிகர்களை கோலிவுட்டின் இந்த க்யூட் கபுள் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. 




இந்த ஜோடி தங்களுக்கு அக்டோபர் 10 ஆம் தேதி இரட்டை குழந்தைகள் பிறந்ததாக அறிவித்தனர். வாடகைத்தாய் மூலம் குழந்தைகள் பிறந்த நிலையில், இந்த விவகாரத்தில் சட்ட விதிகள் மீறப்பட்டதாக புகார் எழுந்தது. ஆனால் ஆதாரம் எல்லாம் சரியாக சமர்பித்து சட்டப்படியே தாங்கள் குழந்தை பெற்றதாக விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதியினர் நிரூபித்தனர். இதற்கிடையில் நிகழ்ச்சி ஒன்றில் இரட்டை குழந்தைகளுக்கு உயிர் ருத்ரோநீல் N சிவன், உலக் தெய்விக் N சிவன்  என பெயரிட்டுள்ளதாக நயன் தெரிவித்திருந்தார். 




இப்படியான நிலையில் விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதியினருக்கு இன்று முதலாம் ஆண்டு திருமண நாளாகும். இதனை முன்னிட்டு சமூக வலைத்தளங்களில் பலரும் இந்த ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இப்படியான நிலையில் இரட்டை குழந்தைகளுடன் நயன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.