குறை சொல்லுகிறவர்கள் குறை சொல்லிக்கொண்டேதான் இருப்பார்கள் என பிரபல நடிகையான நயன்தாரா விருது நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருக்கிறார்.
வெட்கப்பட்ட விக்னேஷ் சிவன்
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் நயன்தாராவிற்கு தனியார் ஆன்லைன் சேனல் ஒன்று அண்மையில் Empress of Indian Cinema மற்றும் சிறந்த நடிகைக்கான விருது என இரு விருதுகளை வழங்கியது. இந்த விழாவில் காதலர் விக்னேஷ் சிவனுடன் கலந்து கொண்ட நயன்தாரா, அந்த விருதுகளை வாங்கிக்கொண்டார். அப்போது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய டிடி, “ முகத்தில் ஒரு ஸ்பெஷல் கலை வந்திருக்கிறதே என்று கூற கீழே இருந்த விக்னேஷ் சிவன் வெட்கப்பட்டார்.
சாதிக்க வேண்டும்
தொடர்ந்து மேடையில் பேசிய நயன்தாரா, “ நாம் ஒரு விஷயத்தை சாதித்து விட்டால், அடுத்ததாக நாம் என்ன சாதிக்க முடியும் என்று நினைக்க வேண்டும். ஒரு பெண்ணாக வாழ்வில் சாதிக்க நினைக்கும் போது சிலர் நம்மை பாராட்டுவார்கள், சிலர் இகழ்வார்கள். அது போன்ற தருணங்களில் நாம் கடவுளை வேண்டிக்கொண்டு, தொழிலுக்கு உண்மையாக இருந்து கடுமையாக உழைத்தோம் என்றால் நாம் வாழ்வில் பலவற்றை சாதிக்க முடியும். குறை சொல்லுகிறவர்கள் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். நிறைய பார்த்தாச்சு" என்றார்.
பல வருடங்களாக காதலித்து வரும் நயனும் விக்னேஷ் சிவனும் ஜூன் 9 அன்று, தங்கள் வாழ்வின் அடுத்த கட்டமாக திருமண உறவில் இணைகின்றனர். குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்துகொள்ளவுள்ள இந்த நிகழ்ச்சியை முதலில் பெரியளவில் வெளிநாட்டில் நடத்துவதற்குத் திட்டமிட்ட இருவரும் தங்கள் திட்டத்தை மாற்றியுள்ளனர்.
குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்துகொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்தாலும், விஜய் சேதுபதி, சமந்தா முதலான நெருங்கிய நண்பர்களும் இந்தத் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.