நயன்தாரா:


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் கடைசியாக அவரின் 75-ஆவது படமான 'அன்னபூரணி'  படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்திற்கு பிறகு விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் திருமண ஆவணப்படம் நெட்பிளிக்ஸில் வெளியானது. தற்போது டெஸ்ட், மண்ணாங்கட்டி, டியர் ஸ்டூடண்ட்ஸ், டாக்ஸிக், ராக்காயி, மற்றும் பெயரிடப்படாத ஒரு சில திரைப்படங்களில் நயன்தாரா பிஸியாக நடித்து வருகிறார். 


இந்த படத்திற்கு இயக்குனர் வேறு ஒரு ஹீரோயின் பெயரை கூறிய நிலையில், மம்மூட்டி நயன்தாரா தான் நடிக்க வேண்டும் என அடம்பிடித்து இந்த படத்தில் கமிட் செய்ததாக கூறப்படுகிறது. இதுவரை மலையாள படங்களுக்கு வாங்கிய சம்பளத்தை விட இந்த படத்திற்கு நயன்தாரா வாங்க உள்ள சம்பளம் அதிகம் என கூறப்படுகிறது. இந்த படத்தில் மலையாள நடிகர் மம்மூட்டி மற்றும் மோகன் லால் ஆகியோரது நடிப்பில் உருவாகி வரும் MMMN படத்தில் நயன்தாரா இணைந்துள்ளார். இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் உருவாகி வரும் MMMN படத்தின் 5ஆவது கட்ட படப்பிடிப்பில் நயன்தாரா இணைந்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. ஷூட்டிங்ஸ்பாட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



Nayanthara: நயன்தாரா தான் வேணும்; அடம்பிடித்து 4-ஆவது முறையாக ஜோடி சேர்ந்த 73 வயது நடிகர்!


73-வயது நடிகருக்கு ஜோடியாக நயன்தாரா:


MMMN படத்திற்கு முன்னதாக மம்மூட்டியுடன் இணைந்து நயன்தாரா புதிய நியமம், பாஸ்கர் தி ராஸ்கல், ராப்பகல், டுவெண்டி: 20 (சிறப்பு தோற்றம் – பாடல்) ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளார். MMMN படத்தில் இவர்களுடன் இணைந்து ஃபகத் பாசில், ரேவதி, ராஜீவ் மேனன், சனல் அமன், செரின் ஷிஹாப் ஆகியோர் பலர் நடிக்கின்றனர். இது படத்திற்கான டைட்டிலா அல்லது தற்காலிக டைட்டிலா என்ற கேள்வி எழுந்து வருகிறது. ஏனென்றால் MMMN என்ற டைட்டிலில் Mammootty MohanLal Mahesh Narayanan ஆகியோரது பெயர் இடம் பெற்றுள்ளது.




MMMN படத்தின் படப்பிடிப்பு இலங்கை, லண்டன், அபுதாபி, அஜர்பைஜான், தாய்லாந்து, டெல்லி, ஹைதராபாத் மற்றும் கொச்சி ஆகிய இடங்களில் நடக்கிறது.  மம்மூட்டி நடிப்பில் கடைசியாக டர்போ படம் வெளியானது. இந்தப் படத்திற்கு பிறகு இப்போது டாமினிக், பஷூகா, மெகாஸ்டார்428 மற்றும் AJFC_MMMN ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதே போன்று மோகன்லால் நடிப்பில் பரோஸ் படம் வெளியானது. இப்போது கண்ணப்பா, ஹிருதயபூர்வம், விருஷபா, ராம் மற்றும் AJFC_MMMN ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.