சினிமா மட்டும் இல்லாமல் லிப்-பாம், தேநீர் அவுட்லெட் என தொழிலதிபராகவும் ஆல்ரவுண்டராக வலம் வரும் நயன்தாரா புதிதாக தொழில் தொடங்குவதை குறிக்கும் விதமாக ஸ்பெஷல் அறிவிப்பு காத்திருப்பதாக சஸ்பென்ஸ் கொடுத்துள்ளார்.


நயன்தாரா, ஷாருக்கான் நடிப்பில் வெளியாகியுள்ள ஜவான் திரைப்படம் திரையரங்குகளில் வசூலை வாரி குவித்து வருகிறது. ஐயா படத்தில் சைலன்ட் கேரக்டராக அறிமுகமான நயன்தாரா அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளில் கலக்கி லேடி சூப்பர் ஸ்டாராக உயர்ந்துள்ள உயரத்தில் ரசிக்காத கண்களில்லை. அவர் தற்போது ஒரு படத்தில் நடிக்க ரூ.10 கோடி வரை சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது. சோலோ கேரக்டரிலும் கெத்து காட்டும் நயன்தாரா தமிழ் திரையுலகில் தனக்கு என தனி மார்க்கெட்டை உருவாக்கி உள்ளார். இப்போது ஹிந்தியிலும் களமிறங்கிவிட்டார்.


நடிப்பு மட்டும் இல்லாமல் சினிமா தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வரும் நயன்தாரா மற்ற தொழில்களிலும் ஈடுபட்டு வருகிறார். முதன்முதலில் நயன்தாரா முதலீடு செய்தது சினிமாவில்தான். ரௌடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து தொடங்கியுள்ளார். இந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் நெற்றிக்கண், காத்துவாக்குல ரெண்டு காதல், கூழாங்கல், ஊர்க்குருவி உள்ளிட்ட படங்கள் வெளியாகியுள்ளன. 


அடுத்ததாக உணவுத் தொழிற்சாலையின் பக்கம் நயன் பார்வை சென்றது. சென்னையில் சாய்வாலே என்ற தேனீர் பிராண்டில் முதலீடு செய்துள்ளார். அதன் மூலம் நல்ல வருமான கிடைப்பதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து மேக்-கப் பக்கம் சென்ற நயன்தாரா, தனது தோழியும் மருத்துவருமான ரெனிட்டாவுடன் இணைந்து லிப் பாம் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இது மட்டும் இல்லாமல் முன்னணி ஆன்லைன் விற்பனை நிறுவனங்களின் விளம்பர தூதராகவும் இருந்து வருகிறார். கேரளாவில் ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்வதாகவும் தகவல்கள் வெளியாகின.


இந்த நிலையில் நயன்தாரா வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவு, அவர் புதிய தொழில் முதலீடு குறித்த செய்தியை தரப்போகிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. பச்சை நிற ஆடையில் போஸ் கொடுக்கும் நயன்தாரா, ஸ்பெஷல் அறிமுகம் வெளியாக இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் அழகை பராமரிக்கும் புதிய காஸ்மெட்டிக் பிராண்டை அவர் தொடங்க உள்ளாரா? என்றும் புருவங்கள் உயர்ந்துள்ளன.






மேலும் படிக்க: Ethirneechal Marimuthu: காற்றில் கரைந்தார் மாரிமுத்து.. கண்ணீர் மழையில் உடல் தகனம்..


Jawan Box Office Collection: 2 நாட்களில் ரூ.200 கோடி .. வரலாறு படைக்கும் ஜவான் படம்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!