நயன்தாரா


நடிகை நயன்தாரா கடந்த நவம்பர் 16 ஆம் தேதி தனுஷ் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து அறிக்கை வெளியிட்டார். நயன்தாரா பற்றி உருவான ஆவணப்படத்தில் நானும் ரவுடி தான் படத்தின் படப்பிடிப்பு காட்சிகளை பயன்படுத்த அனுமதி கேட்டும் தனுஷ் அனுமதி கொடுக்காததால் நயன்தாரா இந்த அறிக்கையை வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து தனுஷ் மீது மேலும் பல்வேறு குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்தார். நயன்தாராவுக்கு தமிழ் முதல் மளையாளத் திரையுலகைச் சேர்ந்த பல நடிகைகள் ஆதரவை தெரிவித்தார்கள். இன்னொரு பக்கம் தனுஷ் மீது இப்படியான சர்ச்சையை கிளப்பி தனது ஆவணப்படத்திற்காக அவர் ப்ரோமோஷன் தேடிக்கொள்வதாக பலர் அவரை விமர்சித்தார்கள். இந்த சர்ச்சைக்குப் பின் இந்த ஆவணப்படத்தின் மீதான் ரசிகர்களின் ஆர்வம் கனிசமாக அதிகரித்துள்ளது.  மேலும் இந்த சர்ச்சை குறித்து தனுஷ் இதுவரை தன் தரப்பு விளக்கமளிக்காமல் இருப்பது ரசிகர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்படியான நிலையில் இன்று நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரைப் பற்றிய ஆவணப்படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ளது. 


வார்னிங் கொடுத்தும் காட்சிகளை நீக்காத நயன்தாரா


முன்னதாக இந்த ஆவணப்படத்தின் டிரைலர் வெளியானபோது அதில் நானும் ரவுடிதான் படத்தின் மூன்று நொடி காட்சி ஒன்று பயன்படுத்தப்பட்டது. இந்த காட்சியை ஆவணப்படத்தில் இருந்து நிக்குவதற்கு நயன்தாராவுக்கு தனுஷ் 24 மணி நேரம் கால அவகாசம் கொடுத்ததாகவும் கொடுத்த அவகாசம் முடிந்த பின்னரும் காட்சிகளை நீக்காததால்  தனுஷ் 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடாக கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியதாகவும் தகவல்கள் வெளியாகின. மேலும் விக்னேஷ் சிவன் இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அனைவரும் பார்க்கும் வகையில் வெளியிட்டிருந்தார் . தற்போது இந்த ஆவணப்படத்தில் இந்த காட்சி நீக்கப்பட்டாமல் வெளியிடப்பட்டுள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காட்சிகளை நீக்கச் சொல்லி நோட்டீஸ் அனுப்பியப்பின்னும் அதை நீக்காமல் நயன்தாரா வெளியிட்டுள்ளது அவர் இந்த பிரச்சனையை சட்டரீதியாக எதிர்கொள்ள தயாராக இருப்பதையே காட்டுகிறது.