அன்னப்பூரணி


நடிகை நயன்தாராவின் 75ஆவது திரைப்படமாக உருவான ‘அன்னபூரணி கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி வெளியானது.  அறிமுக இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இப்படத்தை இயக்கியுள்ளார். நடிகர்கள் ஜெய், சத்யராஜ், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், கார்த்திக் குமார், அச்யுத் குமார், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ளார். 


கதை


தனது சிறிய வயது முதலே ருசியை நுணுக்கமான கண்டறியும் தனித்துவமான திறமையைக் கொண்டிருக்கிறார் அன்னப்பூரணி. உலகளவில் புகழ்பெற்ற செஃப் ஆவதே இவரது கனவு. பாரம்பரியமான பிராமண குடும்பத்தில் பிறக்கும் அன்னப்பூரணிக்கு மிகப்பெரிய தடையாக இருப்பது அவரது வளர்ந்த கலாச்சாரம். தன்னுடைய  குடும்பச் சூழலில் இருக்கும் கட்டுப்பாடுகளை கடந்து வெளி உலகின் தான் சந்திக்கும் சவால்களை எதிர்கொண்டு தனது லட்சியத்தை அன்னப்பூரணி அடைந்தாரா என்பதே இந்தப் படத்தின் கதை. 


குடும்ப ஆடியன்ஸ் மத்தியில் நல்ல விமர்சனங்களைப் பெற்று திரையரங்கில் ஓடிய இப்படம் அன்னப்பூரணி. தற்போது இந்தப் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


ஓடிடி ரிலீஸ்


அன்னபூரணி படத்தின் ஓடிடி உரிமத்தை நெட்ஃப்ளிக்ஸ் தளம் பெற்றுள்ளது. வரும் டிசம்பர் 29 ஆம் தேதி இந்தப் படம் இந்தத் தளத்தில் வெளியாக இருக்கிறது.