தனுஷ் நயன்தாரா சர்ச்சை
நடிகை நயன்தாரா தனுஷ் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து அறிக்கை வெளியிட்டுள்ளார். இதில் முக்கிய குற்றச்சாட்டு நயன்தாராவைப் பற்றி நெட்ஃப்லிக்ஸ் தயாரித்துள்ள ஆவணப்படத்திற்கு நானும் ரவுடிதான் படத்தின் காட்சிகளை பயண்படுத்த தனுஷ் அனுமதி வழங்காததை நயன்தாரா குறிப்பிட்டுள்ளார். மேலும் வேறு ஒரு தனிநபரின் செல்ஃபோனில் எடுத்த படப்பிடிப்பு வீடியோவை பயன்படுத்தியதற்காக தனுஷ் பத்து கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளதும் இந்த சர்ச்சையில் முக்கிய குற்றச்சாட்டாக இடம்பெற்றுள்ளது. நயன்தாராவின் அறிக்கை வெளியாகி தனுஷ் மீது பெரும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது. நயன்தாரா மட்டுமில்லாமல் சிவகார்த்திகேயன் ரசிகர்களும் தனுஷ் மீது கடும் தாக்குதலை சமூக வலைதளங்களில் தொடங்கியுள்ளார்கள். இப்படியான நிலையில் வலைப்பேச்சு வெளியிட்டுள்ள வீடியோ இந்த பிரச்சனையின் மறுபக்கத்தை விளக்கும்படி அமைந்துள்ளது.
தனுஷை மிரட்டிய நயன்தாரா விக்னேஷ் சிவன்
"விக்னேஷ் சிவன் மற்றும் நயன் இடையில் காதல் மலர்ந்தது நானும் ரவுடிதான் படப்பிடிப்பின் போது. அதனால் நயன்தாராவின் ஆவணப்படத்திற்கு இப்படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் மிக அவசியமாக தேவைப்பட்டன. அதனால் இயக்குநர் விக்னேஷ் சிவன் தனுஷிடம் நேரடியாக இதை கேட்காமல் தனுஷின் மேலாளரிடம் ஒரு டெக்னிக்கை கையாண்டிருக்கிறார். தனுஷின் மேலாளர் விக்னேஷ் சிவனுக்கு நல்ல நண்பர் என்பதால் விக்கி அவருக்கு நேரடியாக ஃபோன் செய்து நானும் ரவுடிதான் படப்பிடிப்பு காட்சிகளை பயண்படுத்திக் கொள்வதில் வண்டர்பார் நிறுவனத்திற்கு எந்த ஆட்சேபனமும் இல்லை என்கிற மாதிரி ஒரு மின்னஞ்சல் அனுப்ப சொல்லியிருக்கிறார்.
ஆனால் தனுஷிடம் கேட்காமல் தான் அப்படி அனுப்ப முடியாது என மேலாளர் தெரிவித்துள்ளார். பின் நெட்ஃப்ளிக்ஸ் சார்பாக தனுஷை அனுகி படபிடிப்பு காட்சிகளை பயனடுத்த அனுமதி கேட்டு தனுஷ் மறுத்துள்ளார். இதனால் கடுப்பான நயன் மற்றும் விக்கி தனுஷூக்கு எதிராக உண்ணா விரதம் இருக்கப்போவதாக மிரட்டியிருக்கிறார்கள். மேலும் இந்த பிரச்சனையை பொருவெளிக்கு கொண்டு வந்து தனுஷின் இமேஜை காலி செய்துவிடுவோம் என இருவரும் மிரட்டியதாக வலைப்பேச்சு பிஸ்மி தெரிவித்துள்ளார்.
நயன்தாராவின் அறிக்கையைப் பார்த்து தனுஷூக்கு எதிராக பேசிய பலருக்கு இந்த தகவல் அதிர்ச்சியளித்துள்ளது. இந்த சர்ச்சையில் மேலும் பல தரப்பு உண்மைகள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.