தனுஷ் பற்றி நயன்தாரா
நடிகை நயன்தாரா பற்றி நெட்ஃளிக்ஸ் தயாரித்துள்ள ஆவணப்படம் பற்றி புதிய சர்ச்சை எழுந்துள்ளது. இந்த ஆவணப்படத்தின் ஒரு பகுதியில் நயன்தாரா தனது காதல் வாழ்க்கைப் பற்றிய காட்சிகள் இடம்பெற்றுள்ளன. விக்னேஷ் சிவன் இயக்கி நயன்தாரா நடித்த நானும் ரவுடிதான் படத்தின் போதுதான் இருவருக்கும் காதல் மலர்ந்தது. இதனால் அந்த படத்தின் படப்பிடிப்பு வீடியோக்களை பயன்படுத்திக்கொள்ள தனுஷிடம் அனுமதி கேட்டுள்ளனர். இரண்டு ஆண்டுகள் கழித்தும் தனுஷ் அனுமதி வழங்கவில்லை. மேலும் நயன்தாராவின் தனிப்பட்ட செல்ஃபோனில் எடுக்கப்பட்ட காட்சியை ஆவணப்படத்தில் பயண்படுத்தியதற்காக 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு தனுஷ் நோட்டீஸ் அனுப்பியுள்ளதையும் நயன்தாரா தெரிவித்துள்ளார்.
அடுத்தவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் " உங்களின் இந்த முடிவு எங்கள் மீதான உங்கள் தனிப்பட்ட வெறுப்பை வெளிப்படுத்துவதற்காக மட்டுமே என்பதும், நீங்கள் வேண்டுமென்றே இவ்வளவு காலம் முடிவெடுக்காமல் இருப்பதும் வேதனை அளிக்கிறது.
Netflix ஆவணப்படத்தின் ட்ரெய்லர் வெளியான பிறகு உங்கள் சட்ட அறிவிப்பு இன்னும் அதிர்ச்சியளிக்கிறது. எங்களுடைய தனிப்பட்ட சாதனங்களில் எடுக்கப்பட்ட சில வீடியோக்களின் (வெறும் 3 வினாடிகள்) பயன்பாடு குறித்து நீங்கள் கேள்வி எழுப்பிய அந்த வரிகளைப் படித்ததும் நாங்கள் அதிர்ச்சியடைந்தோம். சமூக ஊடகங்களில் ஏற்கனவே அதிகம் பகிரப்பட்டஅந்த 3 விநாடிகள் ஓடக்கூடிய BTS காட்சிகள் ரூ.10 தொகையை இழப்பீடாக கோரியது அதிர்ச்சியளிக்கிறது..
இது உங்களை எப்போதும் இல்லாத கீழ்நிலைக்கு தள்ளுகிறது மற்றும் உங்கள் தன்மையைப் பற்றி அதிகம் பேசுகிறது. உங்கள் அப்பாவி ரசிகர்கள் முன்னிலையில் ஆடியோ வெளியீட்டு விழாக்களில் மேடையில் இருக்க நீங்கள் உங்களை சித்தரித்துக் கொள்வதில் பாதி நபராகவாவது நீங்கள் இருந்திருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆனால் நீங்கள் மேடையில் பேசுவதை நடைமுறையில் பின்பற்றுவதில்லை, குறைந்தபட்சம் எனக்கும் எனது கணவரிடமும் பின்பற்றுவது இல்லை. " என தனுஷை கடுமையாக திட்டியுள்ளார் நயன்தாரா
தனுஷ் பற்றி விக்னேஷ் சிவன்
நயன்தாராவைத் தொடர்ந்து தற்போது அவரது கணவர் இயக்குநர் விக்னேஷ் சிவனும் தனுஷ் பற்றி இன்ஸ்டாகிராமின் பதிவிட்டுள்ளார் . தனுஷ் பேசும் வீடியோ ஒன்றை பகிர்ந்து " நம்ம ஒருத்தர் மேல இருக்க அன்பு இன்னொருத்தர் மேல இருக்க வெறுப்பா மாறக்கூடாது. அப்படி மாறினால் அந்த அந்த அன்பிற்கு அர்த்தமே இல்லாமல் போகும். வாழு வாழவிடுங்க. யாரும் யாரையும் வெறுக்க வேண்டிய அவசியமே கிடையாது." என தனுஷ் இந்த வீடியோவில் பேசியுள்ளார். " இந்த பேச்சை எல்லாம் நம்பும் அப்பாவி ரசிகர்களுக்காக ஆவது சில மனிதர்கள் மாற வேண்டும் என கடவுளை வேண்டிக் கொள்கிறேன்.வாழு வாழ உடு"