அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நயன்தாராவின் நடிப்பில் தயாராகியுள்ள கனெக்ட் திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் நயன்தாரா நேர்காணல் ஒன்றில் பங்கேற்றார். அதில் ஏராளமான சுவாரஸ்யமான தகவல்களை நயன்தாரா பகிர்ந்துள்ளார்.
அதில் நயன்தாரா பேசுகையில் 'ஒவ்வொரு படத்திலும் ஏதாவது ஒரு வித்தியாசம் காட்ட வேண்டும். ஆரம்ப காலகட்டத்தில் என்னுடைய படங்களை எடுத்துக்கொண்டால் அதில் உங்களால் வேறுபாடு பார்க்க முடியாது.
அதற்கு பிறகு நான் எடுத்த முடிவு தான் வித்தியாசப்படுத்தி காட்ட வேண்டும் என்பது. சமீப காலமாக நான் நடித்த படங்களின் போஸ்டர்களை பார்த்தாலே தெரிந்து விடும். அது எந்த படத்தின் போஸ்டர் என. அது நானும் ரவுடிதான், அறம், விஸ்வாசம், இமைக்கா நொடிகள் என எந்த படமாக இருந்தாலும் வேறுபடுத்தி காட்ட முடிந்தது. என்னை பொறுத்தவரையில் எனக்கும் என்னுடைய ரசிகர்களுடன் இருக்கும் கனெக்ட் அதுதான் என நான் நினைக்கிறன்.
விமர்சனங்கள் குறித்து நயன்தாரா பேசுகையில் " இன்றும் விமர்சனங்கள் வரத்தான் செய்கின்றன. சில சமயங்களில் என்னுடைய தோற்றத்தை வைத்து கூட விமர்சனங்கள் எழுகிறது. நீங்கள் எது செய்தாலும் உங்களை விமர்சனம் செய்வார்கள். நீங்கள் வெயிட் போட்டாலும், உடல் எடை குறைத்தாலும் விமர்சிப்பவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். என்னுடைய முந்தைய படங்களுடன் ஒப்பிட்டு பார்ப்பார்கள். ஆனால் நான் என்னுடைய கதாபாத்திரங்களுக்கு ஏற்றவாறு என்னை வெளிப்படுத்தி கொள்ள முயற்சிக்கிறேன்" என்றார் நயன்.
ஒரு காலகட்டத்தில் நான் கம்ப்ளீட் மேக் அப் போட்டு நடித்த படங்களும் இருந்தன. இது குறித்து விமர்சனமும் எழுந்துள்ளன. ஹீரோயின் ஒருவர் நேர்காணலின் போது மருத்துவமனையில் இருப்பதுபோன்ற ஒரு காட்சியில் நன்றாக மேக் அப் போட்டு கொண்டு முடியை நேர்த்தியாக வைத்து நடித்துள்ளேன் என கூறியிருந்தார். நான் என வெளிப்படையாக அவர் சொல்லவில்லை என்றாலும் அவர் என்னை தான் குறிப்பிட்டு பேசியிருந்தார் என்பது எனக்கு புரிந்தது.
மருத்துவமனையில் இருக்கும்போது எப்படி அப்படி நடிக்க முடியும் என ஏதோ சொல்லியிருந்தார் அவர்; மருத்துவமனை சீனில் நடிக்கும்போது பக்காவாக ட்ரஸ் பண்ணி இருக்க முடியாது தான் என்றாலும், அதற்காக முடியை விரிச்சு போட்டுக்கிட்டா நடிக்க முடியும். அதே போல கமர்சியல் திரைப்படங்கள் மற்றும் ரியலிஸ்டிக் திரைப்படங்களுக்கு தோற்றம் மாறுபடும். கமர்சியல் திரைப்படங்களில் அந்த அளவிற்கு சோகமாக நடிக்க வேண்டும் என இல்லை. இயக்குநர்கள் என்ன எதிர்பார்கிறார்களோ அதைத்தான் செய்ய வேண்டும்" என நயன்தாரா கூறியிருந்தார்.