சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான நாயகி தொடர் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை சுஷ்மா நாயர். இதனைத்தொடர்ந்து சன் டிவியின் திருமகள் தொடரில் நடித்தார். இதில் அவர் பிரகதி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். அதனைத்தொடர்ந்து அவர் அந்தத் தொடரில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். இந்த நிலையிதான் சுஷ்மா நாயர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் நடிக்கப் போகும் புதிய தொடர் குறித்தான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதில் “நான் ஜீ தமிழ் தொலைக்காட்சியின் என்றென்றும் புன்னகை சீரியலில் நடிக்கிறேன். என்னுடைய இந்த புதிய பயணத்திற்கு ஆதரவு தாருங்கள். இந்த சீரியலில் நான் ஸ்ரீநிதி நடித்த நிலா என்ற கதாப்பாத்திரத்தில் நடிக்கிறேன். ஸ்ரீநிதி எப்போதும் அந்த கதாப்பாத்திரத்தில் நினைவு கொள்ளப்படுவார்”என பதிவிட்டுள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் இந்தத் தொடர் ஒளிப்பரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்தத் தொடரை நீலிமா ராணி தயாரித்து வருகிறார். எதற்காக ஸ்ரீ நிதி மாற்றப்படுவதற்கான காரணம் குறித்த எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை.