சமூக வலைதளங்களில் தன் மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கு பைபிலில் இருக்கும் வசனம் ஒன்றை பகிர்ந்து  எதிர்வினையாற்றி உள்ளார் நடிகை  நவ்யா நாயர்.


 நவ்யா நாயர்


கேரளா மாநிலம் ஆலப்புழாவைச் சேர்ந்தவர் நடிகை நவ்யா நாயர். இவர் கடந்த 2001 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான இஷ்டம் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். முதல் படமே ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து மழத்துள்ளிக்கிலுக்கம், நந்தனம், சதுரங்கம், கிராமஃபோன், சேதுராம ஐயர் சி.பி.ஐ , அம்மாக்கிளிக்கூடு, கல்யாண ராமன்,  பட்டணத்தில் சுந்தரன், பாண்டிப்படை,  சர்கார் தாதா, கிச்சாமணி எம்பிஏ என 30க்கும் மேற்பட்ட மலையாளப் படங்களில் நடித்துள்ளார். 


அழகிய தீயே, மாயக்கண்ணாடி, ராமன் தேடிய சீதை உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்த மலையாள நடிகை நவ்யா  நடிகர். தற்போது பண மோசடி விவகாரத்தில் இவர் சிக்கியுள்ளார். சுங்கத் துறைக் கூடுதல் ஆணையர் சச்சின் சாவந்த் வருமானத்திற்கு அதிகமான சொத்து குவிப்பு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து  இந்த சர்ச்சைக்குள் நவ்யா நாயரின் பெயரும் அடிபட்டது. சி.பி.ஐ தாக்கல் செய்த குற்றப் பத்திரிக்கையில், சச்சின், சாவந்த் நவ்யா நாயருக்கு தங்க நகைகள் பரிசாக தந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  மேலும் அந்த குற்றப்பத்திரிக்கையில் அவர் நவ்யா நாயரை சந்திக்க 10 முறை கொச்சிக்கு சென்று வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.


நவ்யா விளக்கம்


இது தொடர்பாக விளக்கமளித்த நவ்யா  “சச்சின் சாவந்த் எனது வீட்டிற்கு அருகில் வசித்து வந்தபோது அவருடன் தனக்கு பழக்கம் ஏற்பட்டதாகவும் தனது பிறந்தநாளின் போது சச்சின் தனது குழந்தைகளுக்கு தங்க நகைகள் பரிசாக கொடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் குருவாயூர் கோயிலுக்குச் செல்வதற்கு, தான் ஏற்பாடு செய்ததாகவும் இதைத் தவிர தங்களுக்கு இடையில் எந்த உறவும் இல்லை எனவும் இதனை தான் அமலாக்கத் துறையிடமும் தான் தெரிவித்துள்ளதாக” விளக்கம் கொடுத்துள்ளார். அவரது இந்த விளக்கத்தைத் தொடர்ந்து அவர்மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.


பாவம் செய்யாதவர்கள் முதல் கல்லை எறியட்டும்






இதனைத் தொடர்ந்து தந்து சமூகவலைதள பக்கத்தில் தான் நடனமாடும் வீடியோ ஒன்றை பதிவிட்ட நவ்யா நாயர் பைபிள் வசனமான குற்றம் செய்யாதவர்கள் முதல் கல்லை எறியட்டும் என்கிற வசனத்தை பதிவிட்டுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.