ஒன்பது குறும்படங்களின் தொகுப்பாக உருவாகி வருகிறது “ நவரசா” என்னும் ஆந்தாலஜி.  நவரசங்களை அடிப்படையாக கொண்ட இந்த வெப் தொடரை ஒடிடிட் தளமான நெட்ஃபிளிக்ஸ் வருகிற ஆகஸ்ட் 6 ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவெடுத்துள்ளது,  கொரோனாவால் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டும் நோக்கில் ’ நவரசா’ என்ற ஆந்தாலஜி வெப் தொடர் உருவாக்கப்பட்டுள்ளது.   இதனை தென்னிந்திய சினிமா துறையினர் முன்னெடுத்துள்ளனர்.இதில் சூர்யா, விஜய் சேதுபதி, பிரகாஷ் ராஜ், ரேவதி, சித்தார்த், யோகிபாபு என ஒரு  ரசிகர் பட்டாளமே நடித்துள்ளனர். இதனை இயக்குநர் மணிரத்தினம் மற்றும் ஜெயேந்திர பஞ்சப்பகேசன் ஆகியோர் தயாரிக்கின்றனர்.  கௌதம் மேனன், கார்த்திக் நரேன், கார்த்திக் சுப்புராஜ், பிரியதர்ஷன், பிஜாய் நம்பியார், அரவிந்த்சாமி உள்ளிட்ட 9 இயக்குனர்கள் இயக்கியுள்ளனர்.


இந்த வெப் சீரிஸின் புரமோஷன் வேலைகளில் இறங்கியுள்ள படக்குழு குறும்படங்களின் வரி காணொளியை  வெளியிட்டு வருகின்றனர். அதன்படி இன்று மாலை  5 மணிக்கு ‘எதிரி’ என்ற குறும்படத்தின் "யாதோ” என்ற  பாடல் வெளியாகும் என டவிட்டர் பக்கத்தில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. பாடல் வரிகளை மதன் கார்க்கி எழுதியுள்ளார். கோவிந்த் வசந்த் இசையமைத்துள்ளார். கருணையை அடிப்படையாக  வைத்து உருவாக்கப்பட்ட கதைக்கு ’எதிரி’ என பெயரிட்டுள்ளனர்.இதனை பிஜாய் நம்பியார் இயக்கியுள்ளார். படத்தில் விஜய் சேதுபதி, பிரகாஷ் ராஜ், அசோக் செல்வன், ரேவதி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.


 







முன்னதாக  காதலை மையாமக வைத்து உருவாக்கப்பட்ட ’கிட்டார் கம்பி மேல நின்று ’ என்ற குறும்படத்தின் வரி காணொளியை  வெளியிட்டிருந்தனர்.”தூரிகா” என்னும் அந்த பாடல் தற்போது யூடியூப் ட்ரெண்டிங்கில் உள்ளது. பாடலை மதன் கார்க்கி எழுதியுள்ளார்.  கார்த்திக் இசையமைத்து பாடியுள்ளார் இந்த குறும்படத்தை   கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ளார். சூர்யா கதாநாயகனாகவும், ப்ரக்யா கதாநாயகியாவும் நடித்துள்ளனர்.







அதன் பிறகு இரண்டாவதாக ” ஒசர பறந்து வா” என்ற மற்றொரு குறும்பட பாடலும் வெளியானது. இந்த பாடலை சௌந்தர்ராஜன் எழுத்தில் வருஷா பாலு பாடியுள்ளார். படாலுக்கு சுந்தர மூர்த்தி கே.எஸ் இசையமைத்துள்ளார். இந்த பாடல் இடம்பெற்றுள்ள குறும்படம் துணிவை மையப்படுத்தி உருவாகியுள்ளது . இதற்கு  'துணிந்த பின்' எனப் பெயரிடப்பட்டுள்து . இந்தப்  குறும்படத்தில் அதர்வா, அஞ்சலி, கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதை  சர்ஜுன் இயக்கியுள்ளார். 







’நவரசா’ ஆந்தாலஜியில் நடித்த நடிகர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் யாரும் இதற்காக சம்பளம் வாங்கவில்லை என்பதுதான் கூடுதல் சிறப்பு. சீரிஸ் வெளியாவதற்குள்ளாகவே நவரசா வெப் தொடரின் அடுத்தடுத்த குறும்படங்களின் பாடல்களும் வெளியிடப்படும்  என எதிர்பார்க்கப்படுகிறது.