தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக அறிமுகமாகி பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் பிரபலமானவர் நட்சத்திரா. இதை தொடர்ந்து அவருக்கு சின்னத்திரை சீரியல்களிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதனைத்தொடர்ந்து நாயகி, வாணி ராணி, லட்சுமி ஸ்டோர்ஸ் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்தார். தற்போது அவர் விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.


சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நட்சத்திரா, அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்களை வெளியிடுவது வழக்கம். இந்த நிலையில் தற்போது அவர் வெளியிட்டுயிருக்கும் ரீல் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த ரீலில் நட்சத்திரா அண்மையில் சிவாங்கி பாடி நடித்திருக்கும் NO NO NO NO  பாடலுக்கு நடனமாடியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ தற்போது வரை 20,000 த்துக்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர்.






 


 


அதே போல பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பிரபலமடைந்த நடிகை சம்யுக்தாவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ரீலை வெளியிட்டுள்ளார். தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வரும் இந்த ரீலை தற்போது வரை 34 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர்.