கிரிக்கெட் வீரர் நடராஜனின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்படும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார். தொகுப்பாளாராக கலக்கி வந்த இவர், தனுஷின் 3 படத்தில் அவருக்கு நண்பராக நடித்தார். பின், மெரினா படம் மூலமாக கதாநாயகனாக அவதாரம் எடுத்தார். தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த இவர், எஸ்.கே ப்ரோடக்ஷன் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.
இடையில் இவர் படங்கள் அடுத்தடுத்து ப்ளாப் ஆனது. அதன் பின்னர் நெல்சனின் டாக்டர் படம் இவருக்கும் கம்-பேக்காக அமைந்தது. அதைதொடர்ந்து டான் படமும் நல்ல வரவேற்பை பெற்றது. இனி சிவகார்த்திகேயன் காட்டில் மழைதான் என்று எதிர்பார்க்கும் சமயத்தில் ப்ரின்ஸ் வெளியாகி மொக்கை வாங்கியது.
அடுத்தாக அயலான், மாவீரன் படங்களில் இவர் நடித்து வருகிறார். அத்துடன் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பிலும் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். முன்னதாக சிவகார்த்திகேயன் பிரபல கிரிக்கெட் வீரர் நடராஜன் வாழ்கை கதையில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் இது குறித்து கிரிக்கெட் வீரர் நடராஜன் பேசி இருக்கிறார்.சேலத்தை சார்ந்த கிரிக்கெட் வீரரான நடராஜன், ஐபிஎல்லில் ஹைதராபாத் அணிக்காகவும், இந்திய அணிக்காக சில ஓடிஐ மற்றும் டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.
சமீபத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட நடராஜன், அவரின் வாழ்க்கையை தழுவி எடுக்கபோகும் படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கப்போவதாக மீண்டும் உறுதிபடுத்தியுள்ளார். அந்த படமானது தனது கிரிக்கெட் கேரியர் முடிந்த பின்னரே எடுக்க பட உள்ளதாக கூறிய அவர், அந்த படத்தை சிவாகார்த்திகேயனே இயக்கி தயாரிப்பாரா என்பது தெரியவில்லை என்று கூறினார்.
ரஜினி முருகன் 2
சிவகார்த்திகேயன் நடிப்பில் பெரும் வெற்றி பெற்ற ரஜினி முருகன் படத்தின் 2 ஆம் பாகத்திற்கான கதை ரெடியாக இருப்பதாக அப்படத்தின் இயக்குநர் பொன்ராம் தெரிவித்தார். இதில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் இடம் பெற்ற சிவாவின் போஸ் பாண்டி கேரக்டரை இணைக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதேசமயம் கதைக்கு சிவா ஓகே சொன்னதாகவும் கூறப்படுவதால் விரைவில் ரஜினிமுருகன் 2 உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.