படம் பார்க்க அனுமதி மறுக்கப்பட்ட அதே ரோகிணி திரையரங்கில் லால் சலாம் படத்தை மகிழ்ச்சியாக பார்த்துள்ளார்கள் நரிக்குறவர்கள்.


லால் சலாம்


ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள லால் சலாம் படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. விஷ்ணு விஷால், விக்ராந்த், மற்றும் ரஜினிகாந்த் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.  உலகம் முழுவதும் உள்ள ரஜினி ரசிகர்கள் லால் சலாம் படத்தின் ரிலீஸை கொண்டாடி வருகிறார்கள். லால் சலாம் படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் வெளியாகி வந்துகொண்டிருக்கும் நிலையில், படத்தில் ரஜினியின் நடிப்பு சிறப்பாக அமைந்திருப்பதாக ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள். சாதி, மத பேதங்கள் இல்லாமல் ஒற்றுமையை இப்படம் வலியுறுத்தியுள்ளது ரசிகர்களின் மனதைக் கவர்ந்துள்ளது.


அனுமதி மறுக்கப்பட்ட நரிக்குறவர்கள்


எல்லா தரப்பு மனிதர்களும் ஒன்றாக கருதப்படும் ஒரு இடம் திரையரங்கம். ஆனால் அப்படியான திரையரங்கத்திலும் ஒரு சில குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் ஒடுக்கப்படுகிறார்கள். கடந்த ஆண்டு சிம்பு நடித்து வெளியான பத்து தல படத்திற்கு சென்ற நரிக்குறவ இன மக்கள் படம் பார்க்க, சென்னை ரோகிணி திரையரங்கம் அனுமதி மறுத்தது. இதனை அங்கு இருந்த பொதுமக்கள் வீடியோ எடுத்து வெளியிட்டதைத் தொடர்ந்து பெரும் சர்ச்சை ஏற்பட்டது. விமர்சனங்கள் எழத் தொடங்கியது நரிக்குறவர்களை உள்ளே அனுமதித்தது திரையரங்க நிர்வாகம். இப்படி ஒவ்வொரு படத்திற்கும் ஒரு சில நிகழ்வுகள் வெளியாகியபடியே இருக்கின்றன.


டிக்கெட் வழங்கிய ரஜினிகாந்த்






தற்போது வெளியாகியிருக்கும் லால் சலாம் படத்தைப் பார்க்க நரிக்குறவர் இன மக்களுக்கு  நடிகர் ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் சார்பாக டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது பாராட்டுக்களைப் பெற்று வருகிறது. திரையரங்கத்திற்கு வந்த நரிக்குறவர்களை மரியாதையாக நடத்திய ரோகிணி திரையரங்க நிர்வாகம் அவர்களை படம் பார்க்க அனுமதித்தது.


படையப்பா , முத்து படங்கள் தங்களுக்கு பிடிக்கும் என்றும் தற்போது லால் சலாம் படத்தை குடும்பத்துடன் பார்க்க வந்திருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தார்கள். இந்தப் படத்தை ரஜினியின் மகள் இயக்கியிருப்பதில் மிகுந்த மகிழ்ச்சி என்று அந்த பெண்மணி தெரிவித்துள்ளார். ரஜினியை பார்ப்பதற்கு தங்களுக்கு எப்போதும் பிடிக்கும் என்றும் அவர் பேசியுள்ளார். 




மேலும் படிக்க : Lal Salaam Review: ரஜினிகாந்தின் மாஸ் கேமியோ! ஐஸ்வர்யா இயக்கம் எப்படி? “லால் சலாம்” திரைப்பட விமர்சனம்!


Lover Movie Review: காதலில் பிரச்சினை காதலர்களா, தவறான புரிதலா? மணிகண்டனின் "லவ்வர்" பட விமர்சனம் இதோ!