Kia EV9 SUV: கியா நிறுவனத்தின் புதிய EV9 SUV காரின் விலை, தொடர்பான தகவல்கள் கசிய தொடங்கியுள்ளன.
Kia EV9 SUV விலை ரூ.1 கோடியா?
இந்திய சந்தையில் கிடைக்கும் மற்ற சொகுசு கார்களைப் பார்த்து, புதிய கியா எஸ்யூவியை சுமார் ரூ. 1 கோடி மதிப்பீட்டில் வாங்க விரும்புவீர்களா? ஏனென்றால், இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ள Kia நிறுவனத்தின் புதிய EV9 காரானது மலிவானதாக இருக்காது. அதாவது புதிய எஸ்யுவி ஆனது ரூ. 65 லட்சத்திற்கும் மேலான விலையில் உள்ள EV6க்கும் அதிகமான விலைப்பட்டியலில் அமரும் என கூறப்படுகிறது.
Kia EV9 SUV வடிவமைப்பு விவரங்கள் அம்சங்கள்:
EV9 மாடல் அளவில் மிகப்பெரியதாக இருப்பதோடு, கியா நிறுவனத்தின் முதன்மையான மின்சார சொகுசு SUV ஆகவும் உள்ளது. 5 மீட்டருக்கும் அதிகமான நீளம் கொண்ட, EV9 SUV ஆனது 3,100 மிமீ நீளமான வீல்பேஸைக் கொண்டுள்ளது. 6 அல்லது 7 இருக்கைகள் உள்ளமைவுடன் கிடைக்கும் EV9 எடையானது, அதன் அளவு மற்றும் பேட்டரி/மோட்டார் எடை காரணமாக 3 டன்களை நெருங்குகிறது. ஸ்டைலிங் கடினமானது மற்றும் e-GMP உடன் ஒரு பெஸ்போக் எலக்ட்ரிக் கார் பிளாட்ஃபார்மில் உற்பத்தி செய்யப்படுகிறது.
Kia EV9 SUV அம்சங்கள்:
முன்புறத்தில் ஃப்ளஷ் கதவு கைப்பிடிகளுடன் டிஜிட்டல் பேட்டர்ன் லைட்டிங்கை கொண்டுள்ளது. பின்புறம் எல்.ஈ.டி விளக்கு உள்ளது. உள்ளே, இரண்டாவது வரிசையில் சுழலும் இருக்கை மற்றும் இரட்டை சன்ரூஃப் உள்ளது. குறிப்பிட்ட டாப்-எண்ட் டிரிம்கள் ரிலாக்சேஷன் இருக்கைகளுடன் வருகின்றன. இரண்டாவது வரிசையில் உள்ள இந்த இருக்கைகள் மசாஜ் செய்யும் வசதியை பெற்றுள்ளன. பேஸ் மாடல்களில் 19-இன்ச் சக்கரங்கள் இருந்தாலும், முழுமையாக மேம்படுத்தப்பட்ட டாப்-எண்ட் மாடலில் 21-இன்ச் சக்கரங்கள் கிடைக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 2 மீட்டர் அகலம் கொண்டுள்ள இந்த காரில், 12.3-இன்ச் தொடுதிரை, கைரேகை அங்கீகாரம் மற்றும் இணைக்கப்பட்ட தொழில்நுட்பங்களின் வரம்பு போன்ற பிரீமியம் வசதிகளைக் கொண்டுள்ளது.
பேட்டரி விவரங்கள்:
இந்த வாகனத்தின் பேட்டரியை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால், சராசரியாக 505 கிலோ மீட்டர் தூரம் பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டாப் எண்ட் வேரியண்ட் பெரிய 99.8kWh பேட்டரி பேக்கைப் பெறுகிறது. அதே நேரத்தில் சிறிய வேரியண்டில் 76.1kWh பேட்டரி உள்ளது. BMW iX மற்றும் இதர சொகுசு மின்சார வாகனங்களின் பாணியில், EV9 SUV-யின் விலை ரூ.1 கோடி என வரை நிர்ணயிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அளவு, இடவசதி மற்றும் வரம்பு ஆகியவை EV9 மாடல் பிளஸ் பாயிண்டுகளாக கருதப்படுகிறது. ஆனால் இந்திய கார் சந்தையில் ஒரு கோடி ரூபாய்க்கான மின்சார வாகன பிரிவில், அனைத்து சொகுசு பிராண்டுகளும் தங்களது மாடல்களை கொண்டிருப்பதால் அங்கு கடும் போட்டி நிலவுகிறது.
Car loan Information:
Calculate Car Loan EMI