சொந்த பணத்தில் இருந்து வருஷத்துக்கு ரூ.30 கோடியை ஏழை குழந்தைகளுக்கு கொடுக்கும் சூப்பர் ஸ்டார்! யார் தெரியுமா?

ஆண்டுதோறும் ரூ.30 கோடி நன்கொடை கொடுத்து கிட்டத்தட்ட 1000-திற்கும் அதிகமான குழந்தைகளின் உயிரை தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு காப்பாற்றி வருகிறார் என்பது உங்களுக்கு தெரியுமா?

Continues below advertisement

சினிமாவில் நடிகர் - நடிகைகள் பலருக்கும் உதவி செய்வது போல் படங்களில் நடித்திருந்தாலும் நிஜத்தில் அப்படி இருப்பது இல்லை. தமிழ் சினிமாவில் கூட யாருக்கும் தெரியாமல் சில நடிகர், நடிகைகள் உதவி செய்து வருகிறார்கள். என்று கேள்வி பட்டிருந்தாலும் ரூ.30 கோடியை வருடம் தோறும் அள்ளிக்கொடுக்கும் மனசு யாருக்கும் இருந்தது இல்லை.

Continues below advertisement

ஆனால் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் மகேஷ் பாபு ஆண்டுதோறும் 1000க்கும் அதிகமான குழந்தைகளின் உயிரை காப்பாற்றி வருகிறாராம்.  இந்தியாவிலேயே அதிகளவில் தொண்டு செய்யும் நடிகர் என்ற பெருமையை மகேஷ் பாபு பெற்றுள்ளார். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் இவர்,  இதன் மூலமாக ஈட்டிய வருமானத்தில் குறிப்பிட்ட தொகையை தொண்டு செய்யும் பணிகளுக்காக பயன்படுத்தி வருகிறார். இதற்காக வருடத்திற்கு 30 சதவிகிதத்தை நன்கொடையாக கொடுத்து வருகிறார் என கூறப்படுகிறது. 


30 சதவிகிதம் என்று பார்த்தால் வருடத்திற்கு ரூ.25 கோடி முதல் ரூ.30 கோடி வரையில் இருக்கும் என்று கூறுகிறார்கள்.  பல தொண்டு நிறுவனங்களை நடத்தி வருவதோடு, ஏராளமான தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடனும் இணைந்து தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். இதுவரையில் கிட்டத்தட்ட 1000க்கும் அதிகமான குழந்தைகளின் இதய அறுவை சிகிச்சைக்காக உதவி செய்துள்ளார். அதுமட்டுமின்றி 2 கிராமங்களை தத்தெடுத்து, அந்த கிராமங்களுக்கு தேவையான அத்தியாவசிய உதவிகளை செய்து கொடுத்துள்ளார். 

இதில் சாலை, மின்சாரம், பள்ளி மற்றும் சுகாதார வசதிகள் என்று எல்லாமே அடங்கும்.
கடைசியாக மகேஷ் பாபு நடிப்பில் குண்டூர் காரம் படம் வெளியானது. இதையடுத்து இயக்குநர் எஸ் எஸ் ராஜமௌலி இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படம் 2 பாகங்களாக வெளியாக இருக்கிறது. முதல் பாகம் வரும் 2027ஆம் ஆண்டும், 2ஆம் பாகம் 2029ஆம் ஆண்டும் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.

 

 

Continues below advertisement