80களில் தமிழ் சினிமாவை கலக்கிய முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் ராமராஜனை அவ்வளவு எளிதில் யாராலும் மறந்து விட முடியாது. குறிப்பாக 'கரகாட்டக்காரன்' திரைப்படம் அவரின் திரைவாழ்வில் ஒரு மைல் கல்லாகவே அமைந்த திரைப்படம். மிகவும் திறமையான இந்த நடிகருக்கென ஒரு தனி ஸ்டைல் இருந்தது. கிராமத்து கலைஞனாக, தன்மையான மென்மையான நடிகராக, ஆபாசமாக நடிக்காத நடிகராக இருந்ததால் இவருக்கு தாய்குலங்களின் சப்போர்ட் அதிகம். அவரின்  அனைத்து படங்களுமே குடும்பமாக வந்து பார்க்க கூடிய படங்களாகவே இருக்கும் என்பதால் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மவுசு அதிகம். 


நம்ம ஊரு ராசா வெளியான நாள் இன்று:


பலரும் நடிகர் ராமராஜன் ஒரு சிறந்த நடிகர் என்பதை மட்டுமே அறிவார்கள் அனால் அவர் பல படங்களை இயக்கியும் உள்ளார் அதில் பல படங்கள் சூப்பர்ஹிட் வெற்றியும் பெற்றன. அதில் மிகவும் பிரபலமான ஒரு திரைப்படம் " நம்ம ஒரு ராசா". 1996ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இன்றைய தினத்தில் வெளியானது. இன்றோடு இப்படம் வெளியாகி 26 ஆண்டுகள் நிறைவையந்துவிட்டன. நடிகை ராமராஜன் தானே இயக்கி நடித்த இந்த திரைப்படம் அமோக வரவேற்பு பெற்றது. நடிகர் ராமராஜன் ஜோடியாக நடிகை சங்கீதா நடித்திருந்தார். இவர்களோடு வடிவேலு, பொன்வண்ணன், சார்லி, சண்முகசுந்தரம், ஆர்.பி.விஸ்வம், பொன்வண்ணன், சத்யப்ரியா, காந்திமதி, அல்வா வாசு உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இது ஒரு குடும்பம் சார்ந்த படமாக இருந்ததால் தாய்குலங்களின் வரவேற்பை அள்ளியது. இசையமைப்பாளர் சிற்பியின் இசையில் இடம்பெற்ற பாடல்களான என்னுடைய மாடப்புறா, காடு வெட்டி, ஒரு ஜான், அம்மா அம்மா மாரியம்மா, தன்மான ஆகிய பாடல்கள் மிகவும் பிரபலமான பாடல்கள். நடிகர் ராமராஜன் இயக்கி நடித்த படங்களில் ஹிட் கொடுத்த படங்களில் இதுவும் ஒன்று. 


 



 


ராமராஜன் இயக்கிய படங்களின் லிஸ்ட்:


இதை தவிரவும் மண்ணுக்கேத்த பொண்ணு, மருதாணி, அம்மன் கோயில் வாசலிலே, கோபுரதீபம், ஹலோ யாரு பேசுறது ?, மறக்க மாட்டேன், சோலை புஷ்பங்கள், ஒன்று எங்கள் ஜாதியே, சீறி வரும் காளை, விவசாயி மகன் உள்ளிட்ட படங்களையும் நடிகர் ராமராஜன் இயக்கியுள்ளார். பெரும்பாலும் அவர் இயக்கும் படங்களில் அவரே கதாநாயகனோஜ் நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


மீண்டும் களம் இறங்கும் கரகாட்டக்காரன்:


நடிகர் ராமராஜன் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் என்னவென்றால் சுமார் 10 ஆண்டுகள் கழித்து நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் அவர் "சாமானியன்" என பெயரிடப்பட்டுள்ள  திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க உள்ளார். இது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இயக்குனர் ரமேஷ் இயக்கும் இப்படத்தில் ராதாரவி, எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இது நடிகர் ராமராஜனின் 45 வது திரைப்படமாகும். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த போஸ்ட்டரினை வெளியிட்டுள்ளார் நடிகர் விஜய் சேதுபதி. 


 






 


உறுதியான நடிகர் :


தீவிரமாக அரசியலில் ஈடுபட்டு இருந்த நடிகர் ராமராஜன் பல கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்புகள் தேடி வந்தாலும், வந்தா ஹீரோவாக தான் வருவேன் என விடாப்பிடியாக இருந்து தற்போது 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஹீரோவாக களம் இறங்குகிறார்  ராமராஜன். இது அவரின் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கலந்து மகிழ்ச்சியான செய்தியாகவே உள்ளது.