நடிகை தேவையானியின் இளைய சகோதரரான நகுல், இயக்குநர் ஷங்கரின் 'பாய்ஸ்' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். துவக்கத்தில் பருமானாக இருந்த நகுல், தனது உடலமைப்பை முற்றிலும் மாற்றிக்கொண்டு 'காதலில் விழுந்தேன்' படத்தில் கதாயகனாக நடித்தார். அந்தப் படம் அவருக்கு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது. தொடர்ந்து கந்தகோட்டை, நான் ராஜாவாக போகிறேன், வல்லினம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் , செய் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.


தற்போது வாஸ்கோடகமா என்ற படத்தில் நடித்து வருகிறார் நகுல். நடிகர் நகுல் சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதுடன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு வருகிறார். எதிர் காலத்தில் 'எரியும் கண்ணாடி' மற்றும் 'வாஸ்கோடகாமா' என இரண்டு படங்கள் நகுல் நடிப்பில் வெளியாகவிருக்கின்றன. ’டான்ஸ் vs டான்ஸ்’,  ‘சூப்பர் சிங்கர் ஜூனியர் 7’ ,  ‘சூப்பர் சிங்கர் ஜூனியர் 8’ , ’பிக்பாஸ் ஜோடிகள்’ உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பங்கேற்று இருக்கிறார். தான் நீண்ட காலமாக காதலித்து வந்த தனது காதலியான ஸ்ருதி பாஸ்கரை கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.


நடிகர் நகுலும் அவரது மனைவி ஸ்ருதியும் கடந்த 2020ஆம் ஆண்டு பெண் குழந்தைக்கு பெற்றோர் ஆயினர். வாட்டர் பர்த் முறையில் முதல் குழந்தையை பெற்றெடுத்தார் ஸ்ருதி. அந்த குழந்தைக்கு அகிரா என பெயரிட்டனர். தற்போது, நகுலின் மனைவி ஸ்ருதி மீண்டும் கர்ப்பமாகி கடந்த ஜூன் 18 ஆண் குழந்தை ஒன்றை பெற்று எடுத்தார். இந்தக் குழந்தையையும் அவர் வாட்டர் பர்த் முறையிலேயே பெற்றுக் கொண்டனர். 


இந்தநிலையில்,நடிகர் நகுலின் மனைவி ஸ்ருதி தனது இரண்டாவது குழந்தையின் பெயரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், "எங்கள் இரண்டாவது குழந்தை மற்றும் அகிராவின் தம்பியின் பெயரை அறிவிப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம் - 'அமோர்'  என்று பெயர் வைத்துள்ளதாக குறிப்பிட்டார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.






இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் இந்தத் தம்பதி தங்களது நடவடிக்கைகள், குழந்தையுடன் செய்யும் சேட்டைகள், தங்களது பர்சனல் விஷயங்கள்,உள்ளிட்டவற்றை தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண