டோலிவுட் திரையுலகின் ரோமியோவாக வலம் வருபவர் நடிகர் நாக சைதன்யா. 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தின் தெலுங்கு ரீமேக்கில் இணைந்து நடித்த போது சமந்தாவுடன் ஏற்பட்ட காதல் இருவீட்டாரின் சம்மதத்துடன் 2017ம் ஆண்டு கோவாவில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. மிகவும் கியூட் காதல் ஜோடியாக வலம் வந்த இவர்களின் திருமண வாழ்க்கையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பரஸ்பரம் விவாகரத்து பெற போவதாக கடந்த 2021ம் ஆண்டு சோசியல் மீடியா மூலம் அறிக்கையாக வெளியிட்டனர்.


அவர்களின் இந்த பிரிவு ரசிகர்கள் மற்றும் திரையுலகத்தினர் மத்தியில் மிக பெரிய அதிர்ச்சியாக இருந்தது. விவரகரத்துக்கு பிறகு இருவரும் அவரவர் நடிப்பு பணியில் பிஸியாக ஈடுபட்டு வந்தனர். 


இந்நிலையில்தான் அரிய வகை ஆட்டோ இம்யூன் பாதிப்பான மயோசிட்டிஸ் என்ற பாதிப்பால்  சமந்தா அவதிப்பட்டு அதற்கான சிகிச்சைகளை மேற்கொண்டு மீண்டு வந்தார். தற்போது உடல்நிலை தெரிய சமந்தா மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். 



மறுபக்கம் நடிகர் நாக சைதன்யா மற்றும் 'பொன்னியின் செல்வன்' புகழ் வானதி கேரக்டரில் நடித்த நடிகை சோபிதா துலிபாலா இருவருக்கும் இடையே காதல், அடிக்கடி இருவரும் டேட்டிங் செய்து வருகிறார்கள், ஒன்றாக வெளிநாட்டுக்கு வெகேஷன் சென்று வருகிறார்கள் என்றெல்லாம் பல வதந்திகள் சோஷியல் மீடியா எங்கும் மிகவும் வைரலாகி வந்தது.


இருப்பினும் இந்த வதந்தி குறித்து இரு தரப்பினரும் மௌனமாகவே இருந்து வந்தனர். அதனால் வதந்திகள் மேலும் சூடுபிடிக்க ஆரம்பித்தன. 


இந்நிலையில் இன்று நாக சைதன்யா - ஷோபிதா துலிபாலா இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளது என்ற தகவல் வெளியாகின. இந்த ஆண்டு இறுதியில் அவர்களின் திருமணம் நடைபெறலாம் எனவும் கூறப்படுகிறது. இந்த செய்தி அறிந்த சமந்தா ரசிகர்கள், ஷோபிதா துலிபாலா மற்றும் நாக சைதன்யாவை கடுமையாக திட்டி தீர்த்து வருகிறார்கள்.


இவர்கள் இருவரின் இடையே இருந்த காதல்தான் சமந்தாவை விட்டு விலகியதற்கான காரணமா? அல்லது சமந்தாவுக்கு குழந்தை பிறக்கவில்லை என்பதால் பிரிந்தாரா?  என பல விமர்சனங்களை அள்ளி வீசி வருகிறார்கள்.


நிச்சயதார்த்தத்துக்கு பிறகாவது உண்மையை சொல்வார்களா? இல்லை அதையும் மறைத்து விடுவார்களா? என்றெல்லாம் வெறுப்பை வெளிக்காட்டி வருகிறார்கள் நெட்டிசன்கள். இது ஒரு புறம் இருக்க, நாக சைதன்யா மற்றும் சோபிதாவின் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 


இந்த நிச்சயதார்த்த செய்தியை தற்போது நடிகர் நாகர்ஜூனா உறுதி செய்யும் விதமாக தன்னுடைய எக்ஸ் தள பக்கம் மூலம் போஸ்ட் ஒன்றை பகிர்ந்துள்ளார்






"எங்கள் மகன் நாக சைதன்யாவுக்கும், ஷோபிதா துலிபாலாவுக்கும் இன்று காலை 9:42 மணியளவில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்ததை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். அவரை எங்கள் குடும்பத்தில் வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம். மகிழ்ச்சியான ஜோடிக்கு எங்களுடைய வாழ்த்துக்கள்! அவர்கள் வாழ்நாள் முழுவதும் அன்புடன் மகிழ்ச்சியுடன் இருக்க வாழ்த்துகிறேன். கடவுள் ஆசிர்வதிக்கட்டும்" என பகிர்ந்துள்ளார்.